பதிவு செய்த நாள்
28 மார்2022
22:19
எப்ரல் மாதத்தில், ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என, ‘ஆக்சிஸ்’ வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் சவுகதா பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார். புவிசார் அரசியல் சூழல்கள் காரணமாக, வட்டி விகிதத்தில் எந்த விதமான மாற்றமும் இருக்காது என எதிர்பார்ப்பதாக, அவர் தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் கேப்பிட்டலுக்கு போட்டி
அனில் அம்பானி தலைமையில் செயல்பட்டு, கடனில் மூழ்கியுள்ள, ‘ரிலையன்ஸ் கேப்பிட்டல்’ நிறுவனத்தை வாங்க, கிட்டத்தட்ட 54 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. ‘அதானி, டாடா ஏ.ஐ.ஜி., ஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பார்டு’ என, மிகவும் பிரபலமான பல நிறுவனங்கள், ரிலையன்ஸ் கேப்பிட்டலை கைப்பற்ற போட்டி போடுகின்றன.
அதானி சார்ஜிங் மையம்
‘அதானி டோட்டல் காஸ்’ நிறுவனம், மின்சார வாகனங்களுக்கான, அதன் முதல் சார்ஜிங் மையத்தை அகமதாபாத்தில் அமைத்துள்ளது.மின்சார வாகன உள்கட்டமைப்பு வசதிகளுக்காக, அதானி நிறுவனம், பிரெஞ்சு நிறுவனமான ‘டோட்டல் எனர்ஜிஸ்’ உடன் கூட்டு வைத்து, ‘அதானி டோட்டல் காஸ்’ கூட்டு நிறுவனத்தை உருவாக்கி உள்ளது.
சீனாவின் பின்னணியில் நிறுவனங்கள்
டிஜிட்டல் கடன் வழங்கும் வணிகத்தில் ஈடுபட்டுள்ள 40 வங்கி சாரா நிதி நிறுவனங்கள், சீனாவின் பின்னணியில் இயங்குவதாக, அமலாக்க துறை இயக்குனரகம் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிறுவனங்களின் பட்டியலை, ரிசர்வ் வங்கியிடம் கொடுத்து, அவற்றின் உரிமைத்தை ரத்து செய்ய வேண்டும் என, அமலாக்க துறை கோரியுள்ளாகவும் கூறப்படுகிறது.
பி.வி.ஆர்., ஐநாக்ஸ் ஒன்றிணைப்பு
பி.வி.ஆர்., மற்றும் ஐநாக்ஸ் நிறுவனங்கள் ஒன்றிணைவது குறித்த அறிவிப்பு வெளியானதை அடுத்து, நேற்று இவ்விரு நிறுவன பங்குகளின் விலையும் சந்தையில் அதிகரித்தன.பி.வி.ஆர்., நிறுவன பங்குகள் விலை 10 சதவீதமும்; ஐநாக்ஸ் நிறுவன பங்குகள் விலை 20 சதவீதமும் நேற்று அதிகரித்தன. இவை 52 வாரங்களில் இல்லாத உயர்வாகும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|