பதிவு செய்த நாள்
29 மார்2022
20:10
ஐடிசி சாவ்லான் வாடிக்கையாளர் தேவைகளைக் கருத்தில் கொண்டு புதுமையான வடிவமைப்பில் கைகளைச் சுத்தமாக வைத்திருக்கும் வசதியை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் புதிய சாவ்லான் பவுடர் ஹாண்ட் வாஷை அறிமுகப்படுத்தி உள்ளது. ரூ.10/- விலையுள்ள சாவ்லான் பவுடர் ஹாண்ட்வாஷ் சாஷேவில் உள்ள 200 மிலி திரவ ஹாண்ட்வாஷ் மூலம் 120 வாஷ்கள் கிடைக்கும்.
சாவ்லான் பிரண்டின் 99.9 சதவிகிதம் கிருமி பாதுகாப்பு உறுதிப்பாட்டின் அடிப்படையில் மேம்படுத்தப்பட்டு அனைவருக்கும் ஏற்ற விலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 200 மிலி ஹாண்ட்வாஷ் பம்புடன் ஒப்பிடுகையில், பவுடர் ஹாண்ட்வாஷ் சாஷே வடிவமைப்பில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு 91சதவிகிதம் குறைந்துள்ளது. சாவ்லான் பவுடர் ஹாண்ட்வாஷ் சாஷே இந்தியா முழுவதும் அனைத்து சில்லரைக் கடைகளிலும் கிடைக்கும்.
இது குறித்து ஐடிசி லிமிடெட், தனிநபர் பாதுகாப்பு பொருள்கள் வணிகப் பிரிவு, கோட்ட முதன்மைச் செயல் அதிகாரி சமீர் சத்பதி பேசுகையில் ‘அனைத்து நுகர்வோர் பிரிவு லைப் ஸ்டைல்களிலும் சுத்தத்துக்கு முன்னுரிமை அளித்து ஊக்கப்படுத்த சாவ்லான் கடுமையாக உழைத்து வருகிறது. அனைவருக்கும் ஏற்ற விலையில் சாஷே பேக்கில் சாவ்லான் பவுடர் ஹாண்ட்வாஷ் அறிமுகமாகி உள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு மதிப்பை வழங்கும் பிராண்ட் வரலாற்றில் முக்கிய மைல்கல் ஆகும். அனைவருக்கும் ஏற்ற விலையில் வழங்குவதை விரிவுபடுத்துவதுடன், நெகிழியின் பயன்பாட்டைக் குறைக்கும் உணர்வுப்பூர்வ லைப்ஸ்டைல் தேர்வையும் சாவ்லான் ஊக்கப்படுத்தும்’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|