பதிவு செய்த நாள்
31 மார்2022
20:07

புதுடில்லி:பொதுத்துறை நிறுவனமான எப்.எஸ்.என்.எல்., எனும், ‘பெரோ ஸ்கிராப் நிகாம்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்பனை செய்ய அரசு முடிவு செய்திருப்பதை அடுத்து, அதற்கான ஏலத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சகம் இந்த ஏல அழைப்பை விடுத்துள்ளது. மேலும், ஏல கேட்பு விருப்பத்தை தெரிவிப்பதற்கான கடைசி தேதி, மே 5ம் தேதி என்றும் அமைச்சகம் அறிவித்துள்ளது.எப்.எஸ்.என்.எல்., நிறுவனம், மத்திய அரசுக்கு சொந்தமான எம்.எஸ்.டி.சி., நிறுவனத்தின் 100 சதவீத துணை நிறுவனமாகும்.
கடந்த 1979ம் ஆண்டில், இந்நிறுவனம் துவங்கப்பட்டது. இது, மத்திய உருக்கு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.மத்திய அரசு, பங்கு விலக்கல் நடவடிக்கையின் கீழ், இந்நிறுவனத்தின் பங்குகள் அனைத்தையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிறுவன பங்கு விலக்கல் நடவடிக்கை, அடுத்த நிதியாண்டுக்குள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு, அடுத்த நிதியாண்டில், பங்கு விலக்கல் நடவடிக்கையின் கீழ், கிட்டத்தட்ட 65 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|