பதிவு செய்த நாள்
02 ஏப்2022
19:41

சென்னை:தமிழ்நாடு பாலிமர் பூங்காவில், தொழிற்சாலைகள் துவங்க முன்வரும் நிறுவனங்கள், நிலம் ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.‘சிப்காட்’ அதிகாரிகள் கூறியதாவது:
‘டிட்கோ’ எனும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் சிப்காட் நிறுவனம் இணைந்து, திருவள்ளூர் மாவட்டம், வாயலுார் மற்றும் புழுதிவாக்கம் கிராமங்களில், 265 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாடு பாலிமர் தொழில் பூங்காவை, 216 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தி வருகிறது.
மத்திய அரசின் ரசாயனம் மற்றும் பெட்ரோலிய துறையின், ‘பிளாஸ்டிக் பூங்கா’ திட்டத்தின் கீழ், இந்த பூங்கா செயல்படுத்தப்பட்டு வருகிறது.முதல் கட்டமாக, 180 ஏக்கர் பரப்பளவில், பிளாஸ்டிக் தயாரிப்பு மற்றும் அது சார்ந்த சிறிய மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகள் அமைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.பூங்காவிற்கான சாலை அமைத்தல், தண்ணீர் வினியோகம் செய்வதற்கான கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகள் உட்பட, உட்கட்டமைப்பு வசதிகள் அமைக்கும் பணிகள் முழுமையாக முடிந்துவிட்டன.
இந்நிலையில், இந்த பூங்காவில் தொழிற்சாலைகள் அமைக்க விரும்பும் நிறுவனங்கள், நிலங்கள் ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்கலாம். நிலம் பெற விரும்பும் நிறுவனங்கள், tnpolymerparkonline application.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|