பதிவு செய்த நாள்
02 ஏப்2022
19:43

மும்பை:கடந்த நிதியாண்டில், பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு, 59.75 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
இந்த காலகட்டத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ 19 சதவீதம் உயர்ந்தது. இதன் காரணமாக, முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பும் அதிகரித்தது.கடந்த நிதியாண்டின் இரண்டாவது பாதியில், சந்தை பல்வேறு தடைகளை சந்தித்தபோதும், ஆண்டு இறுதியில், சென்செக்ஸ் 9,059 புள்ளிகள் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
புவிசார் அரசியல் பதற்றம், பணவீக்க அதிகரிப்பு, அன்னிய முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குகளை விற்பனை செய்துவிட்டு வெளியேறியது என பல தடைகள் ஏற்பட்ட போதும், சந்தை சாதனை படைத்துள்ளது.மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு, 59.76 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து, 264 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.கொரோனா தாக்கம் குறைந்து, பொருளாதார மீட்சி துவங்கியதை அடுத்து, சந்தையில் நம்பிக்கை பெருகியது.இது தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை உறுதிபடுத்தும் விதமாக, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சொத்து மதிப்பு, கடந்த ஜனவரி 17ம் தேதி நிலவரப்படி, 280 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது.மேலும், சென்செக்ஸ், அதன் சரித்திரத்தில் இல்லாத வகையில், கடந்த அக்டோபர் 19ம் தேதியன்று, 62 ஆயிரத்து 245 புள்ளிகளை தொட்டது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டை பொறுத்தவரை, அதிகமான பணவீக்கம், புவிசார் பிரச்னைகள், வட்டி விகித அதிகரிப்பு போன்ற காரணங்களால், சந்தை, ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் என்கிறார்கள் நிபுணர்கள்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|