பதிவு செய்த நாள்
02 ஏப்2022
19:45

புதுடில்லி:நாட்டின் 7 முக்கிய நகரங்களில், அலுவலக இடங்களை குத்தகைக்கு விடுவது, கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் இருமடங்கு அதிகரித்துள்ளது.
இந்த 3 மாதங்களில், நிகர அலுவலக குத்தகை, இரு மடங்கு அதிகரித்து 1.15 கோடி சதுர அடியாக உள்ளது.இது குறித்து, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான ‘ஜே.எல்.எல்., இந்தியா’ தெரிவித்துள்ளதாவது:நாட்டில் உள்ள முக்கியமான 7 நகரங்களில், நடப்பு ஆண்டின் முதல் 3 மாதங்களில், கொரோனா பாதிப்புகள் குறைந்து, நிறுவனங்களின் தேவை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், குத்தகைக்கு பெறப்பட்ட அலுவலக இடம் 54.3 லட்சம் சதுர அடியாக இருந்தது.நடப்பாண்டில் இது இரு மடங்கு அதிகரித்து, 1.15 கோடி சதுர அடியாக உயர்ந்துள்ளது. இருப்பினும், இது கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது சற்று குறைவு தான். நகரங்களை பொறுத்தவரை, பெங்களூருவில் குத்தகை ஒப்பந்த எண்ணிக்கை 30 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை, குத்தகைக்கு விடப்பட்டிருக்கும் இடத்தின் அளவு அதிகரித்து உள்ளது. இதற்கு முன் 3.7 லட்சம் சதுர அடியாக இருந்தது, இப்போது 12.1 லட்சம் கோடி சதுர அடியாக அதிகரித்துள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|