காப்பீடு திட்டங்கள் பாதுகாப்பினை உறுதி செய்ய ரைடர் வசதிகாப்பீடு திட்டங்கள் பாதுகாப்பினை உறுதி செய்ய ரைடர் வசதி ...  மொத்த விலை பணவீக்கம் மார்ச் மாதத்தில் அதிகரிப்பு மொத்த விலை பணவீக்கம் மார்ச் மாதத்தில் அதிகரிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
காப்பீடு திட்டங்கள் பாதுகாப்பினை உறுதி செய்ய ரைடர் வசதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2022
00:17

காப்பீடு திட்டங்கள் மூலம் போதுமான பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்து கொள்ள, ‘ரைடர்’ வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.ஆயுள் காப்பீடு பாலிசி பெறுவது போலவே, மருத்துவ காப்பீடு பாலிசி பெறுவதும் அத்தியாவசியமாகி இருக்கிறது.

மருத்துவ காப்பீடு பெற்றிருப்பது எதிர்பாராத மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள உதவுகிறது. கோவிட் -19 பாதிப்பு மருத்துவ காப்பீடு தொடர்பான விழிப்புணர்வை அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக மருத்துவமனை செலவுகள் அதிகரித்து வரும் நிலையில் காப்பீடு பெறுவது முக்கியமாவதோடு, காப்பீடு அளிக்கும் பாதுகாப்பு போதுமானதாக இருப்பதும் அவசியமாகிறது.

பெரும்பாலான நேரங்களில் அடிப்படையான பாலிசி, மொத்த குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளிக்க போதுமானது அல்ல. எனவே, விரிவான காப்பீடு பெற்றிருக்க வேண்டும்.‘ரைடர்’ வசதிகாப்பீடு பாலிசிகள் அளிக்கும் பாதுகாப்பில் மேம்பாடு தேவை எனும் நிலையில், ரைடர் வசதி கைகொடுக்கிறது. காப்பீடு பாலிசிகள் அளிக்கும் பலன்கள் மீது கூடுதலான பலன் பெறும் வசதியே ரைடர் என குறிப்பிடப்படுகிறது. காப்பீடு நிறுவனங்கள் பலவிதமான ரைடர் வசதிகளை அளிக்கின்றன. ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு பாலிசிகள் மீது தேவைக்கேற்ப ரைடர் வசதியை பெறலாம். புதிதாக பாலிசி எடுப்பதைவிட, சிறிது கட்டணம் செலுத்தி,தேவையான கூடுதல் அம்சங்களை பெற்று பாலிசி பாதுகாப்பை வலுவாக்கி கொள்ளலாம். சில பாலிசிகளில் ரைடர் அம்சங்களும் இணைந்திருக்கலாம்.மருத்துவ காப்பீடு நிறுவனங்கள், அறை வாடகை தள்ளுபடி, மருத்துவமனை ரொக்கம், முக்கிய நோய்கள் பாதுகாப்பு என பலவிதமான ரைடர் வசதிகளை அளிக்கின்றன.

பாலிசியின் குறிப்பிட்ட வரம்பிற்கு மேலான பலனை பெறவும், ‘டாப் அப்’ செய்து கொள்ளும் வசதியும் அளிக்கப்படுகிறது. பாலிசி அளிக்கும் பலனில் இடைவெளி இருந்தால் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, மருத்துவ பாலிசிகளில் மருத்துவமனை அறை வாடகைக்கு வரம்பு இருக்கலாம். அறை வாடகைக்கான ரைடர் வசதி மூலம் இதை சமாளிக்கலாம்.வரிச்சலுகை பலன்மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தில் பணத்தேவை இருக்கலாம். மருத்துவமனை ரொக்க பணம் ரைடர் வசதி மூலம், மருத்துவமனையில் தங்கியிருக்கும் நாட்களில் மருத்துவ செலவிற்காக குறிப்பிட்ட தொகையை பெறலாம். பாலிசியில் குறிப்பிட்டுள்ள நாட்கள் அடிப்படையில் இந்த தொகை வழங்கப்படும். மருத்துவமனை செலவுக்கு ஏற்ப இது அமையாது. இதே போல, முக்கிய நோய்களுக்கான பாதுகாப்பு மூலம், சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் போன்றவற்றுக்கு எதிரான பாதுகாப்பை பெறலாம். எனினும் ரைடரை தேர்வு செய்யும் போது அவற்றின் பலன் மற்றும் விலக்கப்பட்ட அம்சங்களை கவனிக்க வேண்டும். வழக்கமான மருத்துவ காப்பீடு பாலிசிகள் மருத்துவமனை செலவுகளை குறிப்பிட்ட அளவுக்கு ஈடு செய்கின்றன.

அதற்கு மேல் தொகை பெற விரும்பினால், பாலிசி மீது டாப் அப் பாதுகாப்பு பெறலாம். இவை தனிநபர் மற்றும் குடும்பத்திற்கு என இரு விதமாக கிடைக்கின்றன. வழக்கமான பாலிசிகளை விட இவை செலவு குறைந்தவை. மருத்துவ காப்பீடு பாலிசிக்கான பிரிமியம் தொகைக்கு வருமான வரிச்சலுகை பொருந்தும் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். ரைடர் வசதிக்காக செலவிடும் தொகைக்கும் இது பொருந்தும். முக்கியமாக காப்பீடு அளிக்கும் பாதுகாப்பு போதுமானதா என்பதை அடிக்கடி ஆய்வு செய்து உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)