வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  தொடர்ந்து 3வது மாதமாக சரிவைக் காணும் ‘ஜியோ’ தொடர்ந்து 3வது மாதமாக சரிவைக் காணும் ‘ஜியோ’ ...
சீனாவை விட இந்தியா இருமடங்கு வளரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2022
21:26

வாஷிங்டன்–நடப்பு ஆண்டில், இந்தியா வலுவான வளர்ச்சியை அடையும் என்றும்; சீனாவை விட வளர்ச்சி இரு மடங்கு வேகமாக இருக்கும் என்றும், பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, பன்னாட்டு நிதியம் அதன், உலக பொருளாதார பார்வை குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:நடப்பு ஆண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் வலுவான வகையில் 8.2 சதவீதமாக இருக்கும். உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கும்.சீனாவின் வளர்ச்சியான 4.4 சதவீதத்தை விட, இரண்டு மடங்கு வேகமானதாக இருக்கும்

.உலக பொருளாதார வளர்ச்சி, நடப்பு ஆண்டில் 3.6 சதவீதமாக இருக்கும். இது கடந்த 2021ல் 6.1 சதவீதமாக இருந்தது.இந்தியாவை பொறுத்தவரை, கடந்த 2021ல், வளர்ச்சி 8.9 சதவீதமாக இருந்தது. 2023ல் வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும்.நடப்பு ஆண்டை பொறுத்தவரை, இதற்கு முந்தைய கணிப்பிலிருந்து 0.8 சதவீதம் குறைத்தே 8.2 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.உக்ரைனில் நடக்கும் போரின் பிரதிபலிப்பு காரணமாக, அடுத்த ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி குறைத்து கணிக்கப்பட்டு உள்ளது. போர் காரணமாக எரிபொருள், மற்றும் உணவு பொருட்கள் விலையில் பாதிப்பு ஏற்பட்டு, அது வளர்ச்சியை பாதிக்கும்.சீனாவில் கடந்த ஆண்டு வளர்ச்சி 8.1 சதவீதமாக இருந்தது. நடப்பு ஆண்டில் வளர்ச்சி 4.4 சதவீதமாக குறையும் என கணிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த ஆண்டு 5.1 சதவீதமாக இருக்கும்.நடப்பு ஆண்டில் சீனாவின் வளர்ச்சியானது. இந்தியாவின் வளர்ச்சியில் பாதியே இருக்கும் சீனாவில் அடிக்கடி கொரோனாவுக்காக அமல்படுத்தப்படும் தடைகள் அதன் வளர்ச்சியை பாதிப்பதாக இருக்கிறது. உலகஅளவில், உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் பொருளாதார வளர்ச்சி கடுமையான சரிவைக் காணும்.கொரோனா பாதிப்புகளிலிருந்து உலகம் மீட்சி காணத் துவங்கிய நிலையில், போரால் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வளர்ச்சி கணிப்பு (சதவீதத்தில்) நாடு 2021 2022 2023இந்தியா 8.9 8.2 6.9சீனா 8.1 4.4 5.1உலக நாடுகளின் வளர்ச்சிநடப்பு ஆண்டு கணிப்புநாடு வளர்ச்சி (சதவீதத்தில்)ரஷ்யா (மைனஸ்) 8.5பிரேசில் 0.8மெக்சிகோ 2.0ஜெர்மனி 2.1இத்தாலி 2.3பிரான்ஸ் 2.9ஜப்பான் 3.3பிரிட்டன் 3.7அமெரிக்கா3.7கனடா 3.9சீனா 4.4இந்தியா 8.2

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)