அதிகரித்து வரும் வளர்ச்சி அதிகரித்து வரும் வளர்ச்சி ...  டுவிட்டருக்கு வர மாட்டேன்: டிரம்ப் டுவிட்டருக்கு வர மாட்டேன்: டிரம்ப் ...
எலான் மஸ்க்: சொல்லி அடித்த கில்லி; இனி ‘டுவிட்டர்’ என்ன ஆகும்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2022
21:05

சான் பிரான்சிஸ்கோ : உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை, கிட்டத்தட்ட 3.39 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கிறார்.

இவ்வளவு பெரிய டீலை, இவ்வளவு சீக்கிரமாக எலான் மஸ்க் முடிவுக்கு கொண்டு வந்துவிடுவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. அவ்வளவு விரைவாக நடந்து முடிந்திருக்கிறது.அடுத்தகட்டமாக, டுவிட்டர் நிறுவனம் இனி என்னவாகும் என்ற கேள்வி, பலமட்டங்களில் எழுப்பப்பட்டு வருகின்றன. ‘டுவிட்டர் நிறுவனம், சுதந்திரமான பேச்சுக்கான தளமாக இருப்பதற்கான திறனை அது பூர்த்தி செய்யவில்லை. ‘அதனால், அதை ஒரு தனியார் நிறுவனமாக மாற்ற வேண்டும்.


அதற்காக அதை வாங்க விரும்புகிறேன்’ என்று அண்மையில் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.இதன் தொடர்ச்சியாக, கடந்த 14ம் தேதியன்று, ஒரு பங்கு 54.20 டாலர் என்ற விலையில், அதாவது, கிட்டத்தட்ட 3.31 லட்சம் கோடி ரூபாய்க்கு, டுவிட்டரை வாங்க தயாராக இருப்பதாக அறிவித்தார். துவக்கத்தில் டுவிட்டரை அவர் கையகப்படுத்தாமல் தடுப்பதற்காக, ‘பாய்ஸன் பில்’ போன்ற நடவடிக்கைகளை டுவிட்டர் நிர்வாகம் மேற்கொண்டது.


ஆனால், தொடர்ச்சியாக நடைபெற்ற பேச்சில், தற்போது 3.39 லட்சம் கோடி ரூபாய்க்கு நிறுவனத்தை விற்பதற்கு சம்மதம் தெரிவித்து உள்ளது.எதிர்பார்ப்புவிற்பனைக்கு பின், டுவிட்டர் நிறுவனம் தனியார் நிறுவனமாக மாறிவிடும் என, டுவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இந்த டீல், நடப்பு ஆண்டின் இறுதிக்குள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இருப்பினும், அது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. நிர்வாக குழுவும், மஸ்க்கும் ஒப்புக்கொண்டாலும், அடுத்து, பங்குதாரர்கள் அனுமதி தேவைப்படும். மேலும், அமெரிக்கா மற்றும் இதர நாடுகளில் உள்ள கட்டுப்பாட்டு அமைப்புகள் அனுமதி வழங்க வேண்டும்.


அதன் பிறகே ஒப்பந்தம் செல்லுபடியாகும்.இதில் மஸ்க்குக்கு சந்தோஷமான விஷயம், டுவிட்டர் நிர்வாக குழுவில் உள்ள அனைவரும் ஒருமனதாக இந்த டீலுக்கு ஆதரவளித்துள்ளது தான். டுவிட்டர் மஸ்க் கைக்கு வந்த பின், அவர் அதில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு, முதலீட்டாளர்கள், நிதி நிறுவனங்கள் மத்தியில் எழுந்துள்ளது.பங்குதாரர்கள் அனுமதி முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, டுவிட்டர் நிறுவனத்தை, விளம்பரங்கள் அடிப்படையிலான வணிகமாக இல்லாமல், சந்தாதாரர்கள் அடிப்படையிலான வணிகமாக மாற்ற இருப்பதாக தெரிவித்துள்ளார்.


டுவிட்டரின் ஆண்டு கூட்டம், மே 25ம் தேதியன்று நடைபெற உள்ளது. அப்போதே பங்குதாரர்களின் அனுமதிக்கான வாக்குப்பதிவு நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போதைய நிர்வாக குழுவை பொறுத்தவரை, டீல் முடிந்த பின் என்னவாகும் என்பது தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக பெரிய மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.டுவிட்டரின் துணை நிறுவனரான ஜாக் டோர்சி, ‘டுவிட்டரை தனி ஒருநபர் நிர்வகிக்க முடியும் என்று நம்பவில்லை’ என, தன்னுடைய அவநம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளார்.


ஆனால், நினைத்து பார்க்க முடியாததை சாதித்துக் காட்டுவதில், எப்போதும் விடாக் கண்டராகவே எலான் மஸ்க் இருந்திருக்கிறார் என்பதை, இந்த உலகம் ஏற்கனவே கண்டுஉள்ளது. இம்முறை என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.பராக் அகர்வால் கதிடுவிட்டர் கைமாற உள்ள நிலையில், தற்போது அதன் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் பராக் அகர்வாலின் நிலைமையும் கேள்விக்குறியாகி உள்ளது.


மும்பை ஐ.ஐ.டி.,யில் படித்த இந்தியரான பராக் அகர்வால், கடந்த ஆண்டு நவம்பரில், டுவிட்டரின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.தற்போதைய மாற்றம் குறித்து பராக் அகர்வால் ஊழியர்களிடம் பேசும்போது, ‘டுவிட்டர் நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்றது. கைமாறும் நிலையில், அது எந்த திசையை நோக்கிச் செல்லும் என்பது தெரியவில்லை.


எலான் மஸ்க் உடன் பேச வாய்ப்பு கிடைக்கும்போது இவை சம்பந்தமான கேள்விகள் எழுப்புவோம்’ என குறிப்பிட்டுள்ளார்.ஒருவேளை நிர்வாக மாற்றம் ஏற்பட்டு, 12 மாதங்களுக்குள்ளாக அகர்வால் பணிநீக்கம் செய்யப்பட்டால், அவருக்கு 323 கோடி ரூபாய் இழப்பீடு கிடைக்கும் என்கிறது, ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)