பெங்களூரில் சி.ஐ.ஐ., கட்டுமான கண்காட்சி பெங்களூரில் சி.ஐ.ஐ., கட்டுமான கண்காட்சி ...  எல்.ஐ.சி., பங்குகளை வாங்க 6 கோடி பாலிசிதாரர் தயார் எல்.ஐ.சி., பங்குகளை வாங்க 6 கோடி பாலிசிதாரர் தயார் ...
மோடோரோலா அறிமுகப்படுத்தும் மோடோ ஜி52 : விலை ரூ 13,499
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2022
18:56

மோடோரோலா நிறுவனம் தனது ஜி வரிசையில் புதிதாக ஜி 52 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. டிசிஐ - பி3 தொழில்நுட்பத்துடன் பிரம்மாண்ட 360 ஹெச்இசட் டச் சாம்ப்ளிங்க் விகிதம் மற்றும் 25 சதவிகித எக்ஸ்ட்ரா வண்ண வரம்புடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. டிசி டிம்மிங்க் மற்றும் 5 எஸ்ஜிஎஸ் ப்ளூ லைட் அண்ட் மோஷன் ப்ளர் ரிடக்ஷன் சான்றும் இதற்குள்ளது.

மோடோ ஜி52 விற்பனை 2022 மே 3 மதியம் 12க்குச் சார்க்கோல் க்ரே மற்றும் போர்சிலீன் வொயிட் ஆகிய இரு வண்ணங்களில் ப்ளிப்கார்ட் மற்றும் சில்லரைக் கடைகளில் கிடைக்கும். 4 + 64 ஜிபி வேரியண்ட் சிறப்பு அறிமுக விலையாக ரூ. 14, 499க்கும், 6+128 ஜிபி வேரியண்ட் ரூ. 15, 499க்கும் கிடைக்கிறது. 4+64ஜிபி & 6+128 ஜிபி வேரியண்ட்களில் ஆன்லைன் மற்றும் சில்லரைக் கடைகளில் நுகர்வோர் ரூ.1000/- உடனடி தள்ளுபடி பெறலாம். ஜியோ வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோ மூலம் ரூ 2,549/- மதிப்புள்ள பலன்களைப் பெறலாம்.

இந்த ஸ்மார்ட்போன் மிக நுணுக்கமாகவும், துல்லியமாகவும், நேர்த்தியான தொடுதலையும், உணர்வையும் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 7.99 எம்எம் மெலிதாகவும், 169 கிராம் குறைந்த எடையோடும், சம்மந்தப்பட்ட பிரிவில் இதுவே இந்தியாவின் மிக மெல்லிய மற்றும் எடை குறைந்த ஸ்மார்ட்போன் ஆகும்.

டால்பி அட்மோஸுடன் கூடிய இரு அசத்தல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மூலம் உண்மையான மல்டி-டைமென்ஷனல் ஒலியில் மூழ்கி செவிகளுக்கு விருந்து படைக்கலாம். மேம்பட்ட பாஸ், தெளிவான வோகல் மூலம் பிடித்தமான ப்ளே லிஸ்ட்டை அதிக சத்தத்திலும் துல்லியமாகக் கேட்டு மகிழலாம். பி52 தண்ணீர் புகாத வடிவமைப்புள்ள ஒரு சில ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்றாகும்.

மைக்ரோ எஸ்டி அட்டையுடன் 1 டிபி வரை விரிவுபடுத்தத் தக்க சேமிப்பு, வடிவமைப்பு, பக்கவாட்டு பிங்கர் பிரிண்ட் விரல் ரேகை ஸ்கேனர், பேஸ் அன்லாக் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். கேரியர் அக்ரெஷன், 2 எக்ஸ் 2 எம்ஐஎம்ஓ மற்றும் என்எப்ச்9இ மூலம் மிகச் சிறந்த இணைப்பும் கிடைக்கும்.

மோடோ ஜி52 ஸ்மார்ட்போன் விளம்பரமற்ற ஆண்ட்ராயிட் 12க்கு உறுதியளிப்பதுடன், ஆண்ட்ராயிட் 13க்கு மேம்படுத்தவும், 3 ஆண்டு பாதுகாப்புகளை நிகழ்நிலைப்படுத்தவும் உத்தரவாதம் தருகிறது. இதிலுள்ள 8 எம்பி அல்ட்ரா-வைட் கேமராவுடன் கூடிய 50 எம்பி க்வாட் பங்க்ஷன் கேமரா எந்த வெளிச்சத்திலும், எந்தக் கோணத்திலும் படமெடுக்க உதவும். மோடோ ஜி52 ஸ்மார்ட்போனில் மிகச் சிறந்த 33வாட் டர்போ பவர் சார்ஜர் மற்றும் நீடித்து உழைக்கும் 5000 எம்ஏஹெச் மின்கலன் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்நாப் டிராகன் 680 ஈடு இணையற்ற திறனுக்கும், மின் சிக்கனத்துக்கும் உதவுகிறது. 6 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ராம் அதிகப் பயன்பாட்டு அனுபவத்தை வலுப்படுத்திக் கருவியின் ஒட்டு மொத்த செயல்பாட்டை 25% அதிகரிக்கிறது. இதிலுள்ள திங்க் ஷீல்ட் பிசினஸ் கிரேட் பாதுகாப்பு அம்சம் மால்வேர், பிஷிங்க் மற்றும் இதர அச்சுறுத்தல்களிலிருந்து தரவுகளைப் பாதுகாக்கிறது என மோடோ செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)