பதிவு செய்த நாள்
03 மே2022
21:27

புதுடில்லி:பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான, ‘போக்ஸ்வேகன்’ அதன், ‘டைகுன் மற்றும் டிகுவான்’ கார்களுக்கான விலையை உயர்த்தி இருப்பதாக அறிவித்துள்ளது.
4 சதவீதம்
அண்மைக் காலமாக பல முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள், தங்கள் கார்களின் விலையை அதிகரித்து வரும் நிலையில், தற்போது அந்த வரிசையில் போக்ஸ்வேகன் நிறுவனமும் இணைந்துள்ளது.இந்நிறுவனம், அதன் தயாரிப்புகளான டைகுன் மற்றும் டிகுவான் ஆகிய கார்களின் விலையை, 4 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் இந்த விலை உயர்வு, 2ம் தேதி முதல் அமலுக்கு வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.கார்களின் விலை 2.5 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை, மாடலை பொறுத்து அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாதிப்பு
அண்மைக் காலமாக, தொடர்ச்சியாக உள்ளீட்டு பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதனால் வாகன தயாரிப்புக்கான செலவும் அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்பை ஈடுசெய்யும் வகையில், வாகனங்களின் விலையை நிறுவனங்கள் உயர்த்தி அறிவித்து வருகின்றன. இந்த வரிசையில், போக்ஸ்வேகன் நிறுவனமும் அதன் கார்களின் விலையை உயர்த்தி உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|