வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  ஏப்ரலில் வாகன விற்பனை  37 சதவீதம் அதிகரிப்பு ஏப்ரலில் வாகன விற்பனை 37 சதவீதம் அதிகரிப்பு ...
வர்த்தக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2022
21:10

புதிய பதவியில் சுதர்ஷன் வேணு


‘டி.வி.எஸ்., மோட்டார்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக, சுதர்ஷன் வேணு நியமிக்கப்பட்டுள்ளார் என்றும்; அவர் உடனடியாக இந்த பொறுப்பை ஏற்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.சுதர்ஷன் வேணு, டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் கவுரவ தலைவரான வேணு சீனிவாசனின் மகன் ஆவார்.


விற்றதுக்கு வருந்தும் அதிகாரி


‘வாட்ஸ்ஆப்’ நிறுவனத்தை, ‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு விற்றது குறித்து வருந்தி பதிவிட்டிருக்கிறார் 2018ம் ஆண்டு வரை, வாட்ஸ்ஆப் தலைமை வணிக அதிகாரியாக இருந்த, நீரஜ் அரோரா.விற்பனை குறித்த பேரத்தில் முக்கிய பங்கு வகித்த அரோரா, வாட்ஸ்ஆப், பேஸ்புக்கின் ஓர் அங்கமாக மாறியதற்கு தான் மட்டுமின்றி; பலரும் வருந்துவதாக குறிப்பிட்டுள்ளார்.


ஞாயிறு அன்றும் விண்ணப்பிக்கலாம்


எல்.ஐ.சி., பங்குகளை வாங்குவதற்காக, சனிக்கிழமை மட்டுமின்றி; ஞாயிறு அன்றும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பங்கு வெளியீட்டின் இரண்டாவது நாளான நேற்றைய நிலவரப்படி, 100 சதவீதம் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.


கரூர் வைஸ்யாவுக்கு விருது


கரூர் வைஸ்யா வங்கி, ‘குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உகந்த சிறந்த வங்கி’ மற்றும் ‘சிறந்த புதுமையான வங்கி’ ஆகிய பிரிவில் இரண்டு விருதுகளை பெற்றுள்ளது.இவ்விருதை, டில்லியில், மத்திய அமைச்சர் நாராயண் ரானே, வங்கியின் பொது மேலாளர் அன்புராஜிடம் வழங்கி சிறப்பித்தார்.


கிளைகளை குறைக்கும் வங்கி


பொதுத்துறையை சேர்ந்த ‘சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா’, அதன் நிதி நிலையை வலுவாக்கும் வகையில், 13 சதவீத கிளைகளை மூடிவிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.இவ்வங்கி, சில கிளைகளை மூடிவிடுவது அல்லது, இணைப்பது போன்ற நடவடிக்கைகளின் வாயிலாக, கிளைகளின் எண்ணிக்கையை, 600 ஆக குறைக்க திட்டமிட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)