பதிவு செய்த நாள்
06 மே2022
19:38
புதுடில்லி:‘வீனஸ் பைப்ஸ் அண்டு டியூப்ஸ்’ நிறுவனம், 11ம் தேதி அன்று, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதை அடுத்து, அதன் பங்கின் விலை 310 – 326 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த, ‘ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்’ பைப்புகளை தயாரிக்கும் வீனஸ் பைப்ஸ் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 11ம் தேதி துவங்கி, 13ம் தேதியன்று முடிவடைகிறது. நிறுவன முதலீட்டாளர்களுக்கு, 10ம் தேதிஅன்று துவங்குகிறது.இதையடுத்து, இந்நிறுவனத்தின் பங்கு விலை 310 – 326 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக 165 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது.
பங்கு வெளியீட்டின் போது 50.74 லட்சம் புதிய பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் எந்த பங்கும் விற்பனை செய்யப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை, நடைமுறை மூலதன தேவைகளுக்கும், பொதுவான நிர்வாக செலவுகளுக்கும் பயன்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.கடந்த 2020 – 21 நிதியாண்டில், இந்நிறுவனத்தின் வருவாய் 309 கோடி ரூபாயாக இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|