பதிவு செய்த நாள்
10 மே2022
21:03

புதுடில்லி: ‘ஓலா, ஊபர்’ போன்ற வாடகை கார் சேவை நிறுவனங்கள் மீது, நுகர்வோர் தரப்பிலிருந்து புகார்கள் அதிகளவில் வருவதை அடுத்து, மத்திய அரசு அந்நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இது குறித்து, நுகர்வோர் விவகாரத் துறை செயலாளர் ரோஹித் குமார் சிங் கூறியுள்ளதாவது: வாடகை கார்களுக்கான தளங்கள், நியாயமற்ற வர்த்தகத்தில் ஈடுபடுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, சவாரி ரத்து செய்வது குறித்த புகார்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து, இத்துறை சார்ந்த நிறுவனங்களுடன் பேச்சு நடைபெற்றது.
இதில் ‘ஓலா, ஊபர், மேரு, ரேப்பிடோ’ உள்ளிட்ட பல நிறுவனங்கள் கலந்துகொண்டன. சந்திப்பின் போது, புகார்கள் மற்றும் அவை சம்பந்தமான புள்ளிவிபரங்கள் நிறுவனங்களிடம் வழங்கப்பட்டன.இக்குறைகளை களைவதற்கான முயற்சிகளை எடுக்காவிட்டால், மிகக் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளில் அரசு சிறிதளவுகூட சமரசம் செய்துகொள்ளாது என்றும் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|