பதிவு செய்த நாள்
12 மே2022
21:02

முதலிடத்தை இழந்த ‘ஆப்பிள்’
உலகளவில், அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக, முதல் இடத்துக்கு வந்துள்ளது, ‘சவுதி அராம்கோ’ நிறுவனம். இதுவரை முதலிடத்தில் இருந்த ‘ஆப்பிள்’ நிறுவனம், இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.கடந்த புதன் நிலவரப்படி, சவுதி அராம்கோ மதிப்பு 187 லட்சம் கோடி ரூபாயாகவும்; ஆப்பிள் மதிப்பு 182 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
பங்கு வெளியீட்டுக்கு விண்ணப்பம்
‘பர்ஸ்ட்மெரிடியன் பிசினஸ் சர்வீசஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பித்து உள்ளது.இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக 800 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டு உள்ளதாக விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.
‘டொயோட்டா மோட்டார்’ திட்டம் ‘
டொயோட்டா மோட்டார்’ நிறுவனம், தன்னுடைய மின்சார வாகன பாகங்கள் தயாரிப்புக்கான மையமாக இந்தியாவை மாற்ற திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மின்சார வாகன பாகங்களை இந்தியாவில் தயாரித்து, ஜப்பான் உள்ளிட்ட பல ஆசிய நாடுகளின் தேவையை நிறைவேற்ற இருப்பதாக, டொயோட்டா தெரிவித்துள்ளது.
நாட்டின் வளர்ச்சி கணிப்பு
நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.6 சதவீதமாக இருக்கும் என, அமெரிக்க தரகு நிறுவனமான, ‘மார்கன் ஸ்டான்லி’ தெரிவித்துள்ளது.இதற்கு முன் இந்நிறுவனம், நாட்டின் வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 7.9 சதவீதமாக இருக்கும் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது குறைத்து கணித்துள்ளது.
ஹோட்டலை விற்றார் டிரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவர் குடும்பத்தினருக்கு சொந்தமான, வாஷிங்டனில் உள்ள ‘டிரம்ப் இண்டர்நேஷனல்’ ஹோட்டலை, மியாமியை சேர்ந்த ‘சி.ஜி.ஐ., மெர்ச்சென்ட்’ குழுமத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.கிட்டத்தட்ட, 770 கோடி ரூபாய் லாபத்துக்கு இந்த ஹோட்டலை டிரம்ப் விற்பனை செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி
நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த மார்ச் மாதத்தில் 1.9 சதவீதமாக உள்ளதாக, மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.மேலும், கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த முழு நிதியாண்டில், 11.3 சதவீத வளர்ச்சி கண்டிருப்பதாகவும், புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ரூ.5 லட்சம் கோடி போச்சு
நேற்று, மும்பை பங்குச் சந்தையின் ‘சென்செக்ஸ்’ 1,100 புள்ளிகள் சரிவைக் கண்டதை அடுத்து, சந்தை முதலீட்டாளர்கள், கிட்டத்தட்ட 5.26 லட்சம் கோடி ரூபாயைஇழந்தனர்.கடந்த ஏப்ரல் 11ம் தேதி சந்தை உயர்விலிருந்து கணக்கிடும்போது, இதுவரை முதலீட்டாளர்கள் 34 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|