பதிவு செய்த நாள்
12 மே2022
21:04

புதுடில்லி:ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டியை அதிகரித்தால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் பாதிக்கப்படும் என, நிதித்துறை செயலர் டி.வி.சோமநாதன் கூறியுள்ளார்.
நாட்டின் பணவீக்கம், ரிசர்வ் வங்கி பராமரிக்க வேண்டிய இலக்கை விட, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது வரும் மாதங்களிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், ஜூன் மாதம் நடைபெற உள்ள கூட்டத்தில், மீண்டும் வட்டி உயர்வு உறுதியாக அறிவிக்கப்படும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 5.7 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக, ரிசர்வ் வங்கி முன்னர் தெரிவித்திருந்தது. ஆனால் இப்போது நிலைமைகள் மாறிவிட்டதால், ஜூன் மாத கூட்டத்தில் தன்னுடைய கணிப்பை மாற்றி, வட்டி உயர்வையும் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்தினால்,அது நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை பாதிக்கும் என, நிதித்துறை செயலர் தெரிவித்து உள்ளார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|