பதிவு செய்த நாள்
12 மே2022
21:06

மும்பை:‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக, கேம்ப்பெல் வில்சன் நியமிக்கப்பட்டு உள்ளதாக, ‘டாடா சன்ஸ்’ நிறுவனம் அறிவித்துள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்சின் துணை நிறுவனமான ‘ஸ்கூட்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வரும் வில்சன், இத்துறையில், கிட்டத்தட்ட 26 ஆண்டு கால அனுபவம் மிக்கவர்.வில்சன் நியமனம் குறித்து, டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் கூறியதாவது:
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு கேம்ப்பெல்லை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த துறையில் அவர் அதிக அனுபவம் மிக்கவர். விமான சேவையில், ஆசியாவில் ஒரு புதிய பிராண்டை உருவாக்கிய அவரது அனுபவம், ஏர் இந்தியா வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.உலகத் தரம் வாய்ந்த விமான சேவையை உருவாக்க, அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கு முன், ஏர் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரியாக, ‘துருக்கிஏர்லைன்ஸ்’ நிறுவனத்தை சேர்ந்த இல்கர் ஐசியை நியமிப்பதாக டாடா சன்ஸ் அறிவித்தது. ஆனால், சில எதிர்ப்புகளால், ஐசி அப்பதவியை ஏற்க மறுத்துவிட்டார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|