பதிவு செய்த நாள்
12 மே2022
21:07

புதுடில்லி:நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில் 7.79 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத உயர்வாகும்.
உணவுப் பொருட்கள் விலை அதிகரித்ததை அடுத்து, கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, பணவீக்கம் உயர்ந்துஉள்ளது.கடந்த மார்ச் மாதத்தில், பணவீக்கம் 6.95 சதவீதமாகவும்; முந்தைய ஆண்டு ஏப்ர லில் 4.23 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், பணவீக்கத்தை 6 சதவீதத்துக்கும் குறைவாக பராமரிக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தி உள்ளது. ஆனால், கடந்த ஜனவரி மாதத்திலிருந்து, சில்லரை விலை பணவீக்கம் தொடர்ந்து 6 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்து வருகிறது. ஏப்ரலிலும் பராமரிக்க வேண்டிய இலக்கை விட பணவீக்கம் உயர்ந்துள்ளதை அடுத்து, ரிசர்வ் வங்கி, மீண்டும் வட்டியை அதிகரிக்கும் என்ற கருத்து வலுப்பெற்று உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|