பதிவு செய்த நாள்
12 மே2022
21:08

புதுடில்லி:‘டாடா குழுமம்’ பேட்டரி தயாரிப்பில் ஈடுபடும் முயற்சியில் இறங்கி உள்ளது. மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதை அடுத்து, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் அவற்றுக்கான பேட்டரியை தயாரிக்கும் நிறுவனத்தை துவங்க திட்டமிட்டுள்ளதாக, குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்து உள்ளார்.
டாடா குழுமம், எதிர்காலத்துக்கு ஏற்றவாறு பல மாறுதல்களை ஏற்படுத்தி வருவதாகவும்; அதன் தொடர்ச்சியாக, பேட்டரி தயாரிப்புக்காக தனியாக ஒரு நிறுவனத்தை அமைக்க திட்டமிட்டு வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.இருப்பினும், பேட்டரி நிறுவனம் குறித்து, மேலதிக தகவல்கள் எதையும் அவர் தெரிவிக்கவில்லை.
நெக்ஸான் இ.வி., டைகோர் இ.வி., போன்ற மின் வாகனங்களின் விற்பனை அதிகரித்ததை அடுத்து, இந்தியாவின் முன்னணி பயணியர் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் உயர்ந்துள்ளது. அடுத்து, வர்த்தக வாகன பிரிவிலும், மின்சார வாகனங்களை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|