பதிவு செய்த நாள்
13 மே2022
20:35

புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க இருப்பதாகவும்; அதற்கான இடம் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளது.
மாருதி சுசூகி நிறுவனம், ஹரியானா மாநிலத்தில், சோனிபாட் மாவட்டத்தில், 800 ஏக்கரில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்காக முதற்கட்டமாக 11 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
முதல்கட்டமாக, ஆண்டுக்கு 2.5 லட்சம் கார்கள் தயாரிக்கப்படும் என்றும், இந்த ஆலை 2025ல் செயல்படத் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இப்பகுதி, விரிவாக்கத்துக்கு போதுமானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.மாருதி நிறுவனம், தற்போது, அதன் ஹரியானா மற்றும் குஜராத்தில் உள்ள ஆலைகளின் வாயிலாக, ஆண்டுக்கு 22 லட்சம் வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்டதாக உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|