பதிவு செய்த நாள்
14 மே2022
15:39

மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே கார்லோ ரகத்தை ஸ்போர்ட்டி கருப்பு வடிவமைப்பு அம்சங்களுடன் அறிமுகப்படுத்தி உள்ளது. இம்மாடலில் க்ளாஸி பிளாக் சர்ரவுண்ட்டுடன் ஸ்கோடா சிக்னேசர் கிரில், ஓஆர்விஎம்-களும் க்ளாஸி பிளாக்கில் ஜொலிக்கின்றன.
ஆர்17 ட்யூயல்-டோன் வேகா 43.18 செமீ அல்லாய் உலோகத்தில் தயாரான சக்கரங்களைக் கொண்டுள்ளது. புதிய குஷாக் ஸ்கோடா பேட்ஜுக்கு பதிலாக மாண்டே கார்லோ பெண்டர் கார்னிஷ் பொருத்தப்பட்டிருக்கும். காரின் பாடி டொர்னேடோ ரெட் மற்றும் கேண்டி வொயிட் ஆகிய இரு நிறங்களிலும், கூரை க்ளாஸி கார்பன் ஸ்டீல் பெயிண்ட் நிறத்திலும், மாண்டே கார்லோவுக்கு ட்யூயல் டோன் அழகியலைத் தருகிறது.
ஆண்டி பிஞ்ச் தொழில்நுட்பத்துடன் கூடிய கூரையிலுள்ள எலெக்ட்ரிக் சன் ரூப் மேலும் மெருகூட்டும். முனைகளிலுள்ள மேட் பிளாக் ரூப், கருப்பு க்ரோம் வெளிப்புறக் கதவுகளின் கைப்பிடிகளும் கார்பன் ஸ்டீல் கூரைகளின் அழகுக்கு அழகு சேர்க்கும். ஓட்டுனரும் பயணியும் கைகளை வசதியாக வைத்திருக்க டோர் ஆர்ம் ரெஸ்ட்கள் உண்டு.
குஷாக் மாண்டே கார்லோ கேபின் முன்பக்க பயணி டேஷ்போர்டிலுள்ள விளக்குகள் சிவப்பு வண்ணத்தில் ஒளிரும். சிவப்பு வண்ணத்தில் 20.32 செமீ ஸ்கோடா வெர்சுவல் காக்பிட்டைக் கொண்டுள்ளது. டேஷ்போர்டின் மையத்தில் ஸ்கோடா ப்ளே செயலிகள் மற்றும் சிவப்பு வண்ணத்தில் 25.4 செமீ இன்போடெயின்மெண்ட் அமைப்பு, அக்ஸிலரேட்டர், பிரேக் மற்றும் க்ளட்ச் பணிகளை பிடிமானத்துடன் கூடிய அலு பெடல்கள் ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது
புத்தம் புதிய ஸ்கோடா குஷாக் மாண்டே கார்லோ அறிமுகம் குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்ட் இயக்குனர் ஜாக் ஹோலிஸ் கூறுகையில் ‘மாண்டே கார்லோ இதயத்துக்கு நெருக்கம் என்பதால் வித்தியாசமான, மென்மையான மற்றும் ஸ்போர்ட்டியான அழகியல் அம்சங்களைக் கொண்ட மகிழுந்தை வாங்கக் கூடுதல் முனைவுகள் எடுக்க விரும்புவர். மாண்டே கார்லோ தனித்துவமான ஸ்டைலுடன் கூடிய உணர்வை வெளிப்படுத்துகிறது’ என்றார்.
குஷாக் மாண்டே கார்லோ 1.0 (எம்டி) மாடல் 15,99,000க்கும், 1.0 (ஏடி) மாடல் 17,69,000க்கும், 1.5 (எம்டி) மாடல் 17,89,000க்கும், 1.5 (டிஎஸ்ஜி) மாடல் 19,49,000க்கு எக்ஸ்-ஷோரூம் விலைகளில் அறிமுகமாகின்றன. குஷாக் சிறப்பு எடிஷன் டொர்னாடோ ரெட் மற்றும் கேண்டி வொயிட் பிரத்யேக வண்ணங்களில் வருகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|