பதிவு செய்த நாள்
14 மே2022
19:40

புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் தயாரிக்கும் திட்டத்தை, தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிறுவனம், இந்தியாவில் டெஸ்லா கார்களுக்கான இறக்குமதி கட்டணத்தை குறைப்பது குறித்து, அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது. ஆனால், அம்முயற்சிகள் அனைத்தும் தோல்வியை தழுவியதை அடுத்து, இந்தியாவில் ஷோரூம்களுக்கு தேவைப்படும் இடத்தை தேடும் முயற்சியை கைவிட்டுஉள்ளது.
டெஸ்லா நிறுவனம், கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே, இறக்குமதிக்கான வரியை குறைக்கும்படி அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தது.ஆனால் மத்திய அரசு, இறக்குமதிக்கான வரியை குறைப்பதற்கு முன்பாக, இந்தியாவில் கார் தயாரிப்பில் இறங்குமாறும்; அதன் பின் வரியை குறைப்பது குறித்து ஆலோசிக்கலாம் என்றும் தெரிவித்து விட்டது.
மேலும் இந்தியாவில் கார் தயாரிப்பில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வரும் நிலையில், டெஸ்லாவுக்கு மட்டும் தனிச் சலுகை வழங்குவது சரியாக இருக்காது என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டது.இருப்பினும், டெஸ்லா நிறுவனம் கடந்த பிப்ரவரி பட்ஜெட் அறிவிப்பின் போது சலுகைகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்த்திருந்தது. ஆனால், பிப்ரவரியிலும் அப்படி எதுவும் நடக்கவில்லை.இதையடுத்து, டெஸ்லா நிறுவனம், தன்னுடைய கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்யும் திட்டத்தை நிறுத்தி வைத்து விட்டதாக கூறப்படுகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|