வீட்டு வசதிக்கான தேவை அதிகரிப்பு வீட்டு வசதிக்கான தேவை அதிகரிப்பு ... வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
உங்கள் சேமிப்பை பாதிக்கும் ஐந்து செலவு பழக்கங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2022
06:02

வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, போதுமான அளவிலும் முதலீடு செய்ய வேண்டும். இதற்கு முதலில் சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும். தேவையான அளவு சேமிக்கும் போதே, முதலீடு செய்வதற்கான தொகை கையில் இருக்கும். வருமானத்தை விட குறைவாக செலவு செய்வதன் வாயிலாக பணத்தை சேமிக்கலாம். அதோடு, சேமிப்பை பாதிக்காத வகையிலும் செலவுகள் இருக்க வேண்டும். இந்த வகையில், சேமிப்பின் பலனை பாதிக்கக் கூடிய செலவு பழக்கங்களை அறிந்திருப்பது அவசியம்.

சேமிப்புக்கு முன்! சேமிப்பிற்கான இலக்கு இல்லாமல் செலவு செய்து கொண்டிருந்தால், தேவையான அளவு சேமிப்பது கடினம். செலவு செய்தது போக எஞ்சியதை சேமிப்பது சரியான உத்தி அல்ல. எனவே, சேமிப்பதற்கு முன், செலவு செய்யும் பழக்கத்தை கைவிட வேண்டும். சேமிப்புக்கான தொகையை ஒதுக்கிய பிறகே செலவு செய்ய வேண்டும்.

செலவு பட்டியல்: செலவுகளை கட்டுப்படுத்த எளிய வழி, தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்துவது தான். எனவே, வாங்க வேண்டிய பொருட்களை பட்டியலிடாமல் ‘ஷாப்பிங்’ செல்வதை தவிர்க்க வேண்டும். திட்டமிடாமல் பொருட்களை வாங்கச் செல்லும் போது, கூடுதலாக செலவு செய்யும் நிலை ஏற்படலாம்.

வருமான உயர்வு: வருமானம் உயர்வது நல்ல விஷயம் தான் என்றாலும், வருமானத்திற்கு ஏற்ப செலவுகளை அதிகரித்துக் கொள்ளக்கூடாது. வருமானம் உயரும் போது அதற்கேற்ப சேமிப்பையும், முதலீட்டையும் அதிகரிக்கவே முன்னுரிமை அளிக்க வேண்டும். இல்லை எனில் வீண் செலவுகளே அதிகரிக்கும்.

‘பட்ஜெட்’ தேவை: வருமானத்தில் எந்த அளவு சேமிக்க முடியும் என்பதை தீர்மானிக்க, முதலில் ‘பட்ஜெட்’ வகுத்துக் கொள்வது அவசியம். வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்யவும் பட்ஜெட் கைகொடுக்கும். எனவே, திட்டமிட்டு செலவுகளை மேற்கொள்ள பட்ஜெட் அவசியம். முறையான பட்ஜெட் இல்லாமல் செலவுகளை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

கூட்டு முடிவு: திட்டமிடுவது, செலவுகளை குறைப்பது எல்லாம் சிறப்பானது என்றாலும், இதில் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு முக்கியம். குறிப்பாக கணவன், மனைவி இந்த நோக்கில் ஒன்றாக செயல்பட வேண்டும். எனவே, செலவுகள் தொடர்பான முடிவுகளை இருவரும் கூட்டாக மேற்கொள்வது நல்லது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)