வர்த்தக துளிகள்வர்த்தக துளிகள் ...  ‘டுவிட்டர்’ ஒப்பந்தம்தடை போட்ட மஸ்க் ‘டுவிட்டர்’ ஒப்பந்தம்தடை போட்ட மஸ்க் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
இன்று பட்டியலிடப்படும் எல்.ஐ.சி., பங்குகள்; மிகுந்த எதிர்பார்ப்பில் புதிய முதலீட்டாளர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2022
21:41


புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் சந்தையில் பட்டியலிடுகிறது.

இந்நிறுவன பங்குகளில் நம்பிக்கையுடன் முதலீடுகளை மேற்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான பாலிசிதாரர்கள் மற்றும் சிறு முதலீட்டாளர்களிடம், லாபத்தை அடைய வாய்ப்பிருக்குமா என்ற கேள்வியே இன்று எழுந்து நிற்கிறது.புவிசார் அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அண்மைக் காலமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர் சரிவைக் கண்டு வருகின்றன.

இந்நிலையில், எல்.ஐ.சி., நிறுவன பங்குகள் விலை உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.எல்.ஐ.சி., பங்கு வெளியீட்டை ஒட்டி, ஏராளமான புதிய முதலீட்டாளர்கள், இந்நிறுவன பங்குகளை வாங்கியதன் வாயிலாக, சந்தைக்குள் அடி எடுத்து வைத்துள்ளனர். இவர்கள் பெருத்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

எல்.ஐ.சி.,க்கு முன் மிகப் பெரிய பங்கு வெளியீடாக இருந்தது, 'பேடிஎம்' நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே, இந்நிறுவன பங்குகள் சந்தையில் பட்டியலிடப்பட்டன. ஆனால், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.கடந்த 2010ம் ஆண்டிலிருந்து இதுவரை பொதுத்துறையைச் சேர்ந்த 21 நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பங்குகளை பட்டியலிட்டுள்ளன.

இவற்றில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட நிறுவன பங்குகள், வெளியீட்டு விலைக்கும் குறைவாகவே வர்த்தகம் ஆகின.இந்நிலையில், எல்.ஐ.சி., நிறுவன பங்குகள் விலை, வெளியீட்டு விலையை விட அதிகரித்து, குறுகிய காலத்தில் லாபமீட்டி தருமா என்ற கேள்விக்கு இன்று விடை கிடைத்துவிடும்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் ... மேலும்
business news
புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் ... மேலும்
business news
தங்கம் 1 கி: 4,755.008 கி: 38,040.00வெள்ளி1 கிராம்: 65.7701 கிலோ: ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)