‘விரைவில் சரியாக வாய்ப்பில்லை’  பணவீக்கம் குறித்து எஸ்.பி.ஐ.,‘விரைவில் சரியாக வாய்ப்பில்லை’ பணவீக்கம் குறித்து எஸ்.பி.ஐ., ... புதிய வங்கியை அமைப்பதற்கான 6 விண்ணப்பங்கள் நிராகரிப்பு புதிய வங்கியை அமைப்பதற்கான 6 விண்ணப்பங்கள் நிராகரிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அடுத்தடுத்து வட்டியை உயர்த்திஅதிர்ச்சி கொடுத்த எஸ்.பி.ஐ.,
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2022
21:44


புதுடில்லி : நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., கடனுக்கான வட்டியை 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி அறிவித்துள்ளது.அத்துடன், இந்த வட்டி உயர்வு 15ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளது.

அதிர்ச்சி
கடந்த மாதம் தான் ஒரு வட்டி உயர்வை அறிவித்திருந்த நிலையில், தற்போது இரண்டாவது தடவையாக வட்டியை உயர்த்தி, வங்கி கடன் பெற்றவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துஉள்ளது எஸ்.பி.ஐ.,இதையடுத்து, வீடு மற்றும் வாகன கடன்களை, எம்.சி.எல்.ஆர்., அடிப்படையில் வாங்கியவர்களின் மாதத் தவணை அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளது.


பணவீக்கம் அதிகரித்து வருவதை அடுத்து, ரிசர்வ் வங்கி, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை 0.40 சதவீதம் அதிகரித்து, அண்மையில் அறிவித்தது. இதையடுத்து, எஸ்.பி.ஐ., உள்ளிட்ட பல்வேறு வங்கிகள், வட்டி உயர்வை அறிவித்தன. தற்போது இரண்டாவது முறையாக வட்டி உயர்வை அறிவித்து உள்ளது

எஸ்.பி.ஐ.,இதையடுத்து, எஸ்.பி.ஐ., கடனுக்கான ஓராண்டுக்கான எம்.சி.எல்.ஆர்., வட்டி விகிதம் 7.10 சதவீதத்திலிருந்து, 7.15 சதவீதமாக உயர்ந்துள்ளது.

எதிர்பார்ப்பு
ஒரு மாதம் மற்றும் மூன்று மாத அடிப்படையிலான வட்டி 6.85 சதவீதமாகவும்; ஆறு மாத காலத்துக்கானது 7.15 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. இரண்டு ஆண்டுக்கானது 7.40 சதவீதமும்; மூன்று ஆண்டுகளுக்கானது 7.50 சதவீதமாகவும் அதிகரித்து உள்ளது.

பெரும்பாலான கடன்கள், ஓராண்டு வட்டி விகிதத்துடன் இணைக்கப்பட்டதாகும்.எஸ்.பி.ஐ., அறிவிப்பை தொடர்ந்து, விரைவில் மற்ற வங்கிகளும் வட்டி உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
Tamilan - NA,India
18-மே-202220:09:24 IST Report Abuse
Tamilan ....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)