இந்தியாவில் கார் விற்பனை திட்டத்தை தள்ளிவைத்தது ‘டெஸ்லா’ இந்தியாவில் கார் விற்பனை திட்டத்தை தள்ளிவைத்தது ‘டெஸ்லா’ ... மே மாத வாகன விற்பனை வளர்ச்சியை கண்ட நிறுவனங்கள் மே மாத வாகன விற்பனை வளர்ச்சியை கண்ட நிறுவனங்கள் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
புத்துயிர் பெறுகிறது அம்பாசிடர்: தயாரிப்பு பணிகள் மும்முரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2022
20:42

புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க வருகிறது.

‘ஹிந்த் மோட்டார் பைனான்ஷியல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மற்றும் பியூஜியோ’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து, அம்பாசிடர் காருக்கு புத்துயிர் ஊட்ட முடிவு செய்துள்ளன.புதிய அம்பாசிடர் கார் மாடல், சென்னையிலுள்ள ‘ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்’ நிறுவன ஆலையில் தயாரிக்கப்படும் என தெரிகிறது.

இந்த ஆலை, சி.கே.பிர்லா குழுமத்தின் அங்கமான ஹிந்த் மோட்டார் பைனான்ஷியல் நிறுவனம் வசம் உள்ளது.இது குறித்து, ஹிந்துஸ்தான் மோட்டார் நிறுவனத்தின் இயக்குனர் உத்தம் போஸ் கூறியதாவது:புதிய அம்பாசிடர் காரை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய காரின் புதிய இன்ஜினுக்கான மெக்கானிக்கல் மற்றும் வடிவமைப்பு பணிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

அம்பாசிடர் கார், 1960களிலிருந்து 1990ம் ஆண்டு மத்தி வரை, ஒரு ‘ஸ்டேட்டஸ் சிம்பலாக’ கருதப்பட்டது. குடியரசு தலைவர், பிரதமர் துவங்கி, பலரும் இந்த காரை தான் பயன்படுத்தி வந்தனர்.இதன்பின் புதிய பிராண்டு கார்கள் வரவும், அம்பாசிடர் தன் பொலிவை இழக்கத் துவங்கியது. இதன் தொடர்ச்சியாக, 2014ல் தயாரிப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

இதன்பின் அம்பாசிடர் பிராண்டை, பிரெஞ்சு நிறுவனமான பியூஜியோ வாங்கியது. தற்போது மீண்டும் அம்பாசிடர் பிராண்டு காரை தயாரிக்கும் முயற்சியில் பியூஜியோவும், ஹிந்த் மோட்டார் பைனான்ஷியல் கார்ப்பரேஷனும் இறங்கி உள்ளன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
business news
புதுடில்லி:அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ‘போர்டு’ உலக சந்தைகளுக்காக, இந்தியாவிலிருந்து, மின்சார ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
KALIHT LURA - kovilnagaram,India
27-மே-202218:01:14 IST Report Abuse
KALIHT LURA இன்றைய போட்டியில் தாக்கு பிடிக்க முடியுமா . இப்போதைய தலைமுறை முற்றிலுமாக மறந்துவிட்ட பெயர்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)