பதிவு செய்த நாள்
04 ஜூன்2022
19:39

புதுடில்லி:கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், நாட்டில், விற்பனை ஆகாத வீடுகளின் எண்ணிக்கை 1 சதவீதம் அதிகரித்து, 9.01 லட்சம் வீடுகளாக உயர்ந்து உள்ளது.
இது குறித்து ‘கிரடாய், கோலியர்ஸ் இந்தியா, லியாஸ் போரஸ்’ ஆகிய நிறுவனங்கள் தயாரித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், முக்கியமான எட்டு நகரங்களில், மொத்தம் 9.02 லட்சம் வீடுகள் விற்பனை ஆகாமல் உள்ளன.
இது, கடந்த ஆண்டில் 8.94 லட்சமாக இருந்தது.மும்பை பெருநகர் பிராந்தியத்தில் தான் அதிக அளவில் வீடுகள் விற்பனை ஆகவில்லை. கிட்டத்தட்ட 32 சதவீத வீடுகள் விற்பனை ஆகவில்லை.இதையடுத்து, டில்லியில் 14 சதவீதம் விற்பனை ஆகவில்லை.சென்னையை பொறுத்தவரை, இது 5 சதவீதமாக உள்ளது. இங்கு 75 ஆயிரத்து, 164 வீடுகள் விற்பனை ஆகவில்லை.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|