பதிவு செய்த நாள்
07 ஜூன்2022
21:04

புதுடில்லி:‘‘ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் ‘டிஜிட்டல்’ தொழில்நுட்ப அறிவாற்றலில் முன்னோடியாக திகழ வேண்டும்,’’ என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின், 75வது சுதந்திர தின விழாவையொட்டி, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசியதாவது:கடந்த 2020 முதல், ‘டிஜிட்டல்’ எனப்படும் மின்னணு தொழில்நுட்பம் மிக அதிக அளவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.
அதனால், சந்தைப் போட்டி கட்டுப்பாட்டு ஆணையம், தேசிய நிதி தகவல் ஆணையம் போன்ற அமைப்புகள் மின்னணு தொழில்நுட்பத்தில் மிக ஆழமான புலமை பெற்றிருக்க வேண்டும். அப்போது தான் மின்னணு தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்துவதை கண்டுபிடித்து தடுக்க முடியும்.மின்னணு தொழில்நுட்ப பயன்பாடு அதிகரித்து வருவதற்கு ஏற்ப, மோசடிகளை தடுப்பதற்கான மென்பொருட்களையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.சில்லரை முதலீட்டாளர்களுக்கு பாராட்டு
பங்குச் சந்தையில் இருந்து அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேறினாலும், வர்த்தகத்தில் அதிக இறக்கம் இருக்காது. ஏனெனில் சில்லரை முதலீட்டாளர்கள் அதிர்ச்சியை தாங்கும் ‘ஷாக் அப்சார்பர்’ போன்று சந்தையை தாங்கி நிற்கின்றனர். பங்கு வர்த்தகத்தில் நாடு முழுதும் சிறு முதலீட்டாளர்களின் ஈடுபாடு அதிகரித்துள்ளது. – நிர்மலா சீதாராமன், மத்திய நிதியமைச்சர்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|