பதிவு செய்த நாள்
07 ஜூன்2022
21:15

புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் வழங்கப்படும் என, மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்நிறுவனம், ‘வாராக் கடன் வங்கி’ என்றும் அழைக்கப்படுகிறது.வாராக் கடன் வங்கி என்பது, 500 கோடி ரூபாய்க்கும் மேல் உள்ள வங்கிகளின் வாராக் கடன்களை கையாளுவதற்காகவே அமைக்கப்பட்ட ஒன்றாகும்.
இது குறித்து, அமைச்சகம் டுவிட்டர் வாயிலாக தெரிவித்துள்ளதாவது:வாராக் கடன் வங்கி அடைந்திருக்கும் முன்னேற்றம் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் அதற்கு வழங்கியிருக்கும் ஒப்புதல்கள், அனுமதிகள் குறித்த அனைத்தும் நிதியமைச்சர் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.வாராக் கடன் கணக்குகளின் முதல் தொகுப்பு, ஜூலை மாதத்தில் வாராக் கடன் வங்கிக்கு மாற்றப்படும்.
மீதமுள்ளவை, நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு வாக்கில் மாற்றப் படும்.முதற்கட்டமாக 82 ஆயிரத்து 845 கோடி ரூபாய் மதிப்பிலான, 38 வாராக் கடன்கள் தேர்வு செய்யப்பட்டு, அதை தீர்த்து வைப்பதற்காக வாராக் கடன் வங்கிக்கு மாற்றப்பட உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|