புதிய பாலிசிகளுக்கு அனுமதி எளிதாகிறது புதிய பாலிசிகளுக்கு அனுமதி எளிதாகிறது ... சுற்றுலா பயணத்தை திட்டமிட ‘டிஜிட்டல்’ கடன் ஏற்றதா? சுற்றுலா பயணத்தை திட்டமிட ‘டிஜிட்டல்’ கடன் ஏற்றதா? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
உங்கள் முதல் சம்பளத்தில் மேற்கொள்ள வேண்டிய முதலீடுகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2022
19:30

முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ நினைப்பதில்லை. சுயமாக சம்பாதிக்க துவங்கியிருக்கும் மகிழ்ச்சியில், விரும்பிய வகையில் செலவுகளை மேற்கொள்ளவே தோன்றும்.

ஆனால், யோசிக்காமல் செலவு செய்யும் இந்த பழக்கத்தை துவக்கத்திலேயே கிள்ளி எறிந்தால், சம்பாதிக்கும் பணத்தை சரியாக திட்டமிட்டு நிதி எதிர்காலத்தை பிரகாசமாக்கி கொள்ளலாம். அந்த வகையில், சேமிப்பையும், முதலீட்டையும் முதல் சம்பளத்தில் இருந்து துவக்குவது பொருத்தமாக இருக்கும்.
சேமிப்புக்கு முதலிடம்:

சம்பளத் தொகையை செலவிடும் முன் சேமிப்புக்கு என ஒதுக்குவது அவசியம். இருபது சதவீதம் வரை சேமிப்பது நல்லது. குறைந்த தொகையில் கூட, எஸ்.ஐ.பி., முறையில் மியூச்சுவல் பண்ட் முதலீட்டை மேற்கொள்ளலாம். பின்னர் இந்த தொகையை அதிகமாக்கி கொள்ளலாம். முதலீடு சீராக வளரும்.
பி.பி.எப்., கணக்கு:

பொது சேமநல நிதியான பி.பி.எப்., கணக்கை வங்கி அல்லது அஞ்சலகம் மூலம் துவக்கலாம். இயன்ற தொகையை முதலீடு செய்யலாம். நீண்ட கால முதலீடான இது, ஓய்வு காலத்திற்காக சேமிப்பதோடு, துவக்கத்திலேயே முதலீடு செய்வதன் மூலம் கூட்டு வட்டியின் பலனையும் பெற்றுத்தரும்.
காப்பீடு:

ஒருவர் போதுமான காப்பீடு பெற்றிருப்பது அவசியம். பொருத்தமான மருத்துவ காப்பீடு திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், எதிர்பாராத மருத்துவ செலவுகளை சமாளிக்கலாம். மருத்துவ காப்பீடு வருமான வரி நோக்கில் உதவும் என்பதோடு, இளம் வயதில் பிரிமியமும் குறைவாக இருக்கும்.
சேமிப்பு கணக்கு:

முக்கிய முதலீடுகளை துவக்குவது போலவே எதிர்பாராத செலவுகளை எதிர்கொள்வதற்கான அவசரகால நிதியை உருவாக்குவது அவசியம். சேமிப்பு கணக்கில் இருக்கும் தொகையில் ஒரு பகுதியை வைப்பு நிதி அல்லது லிக்விட் பண்டிற்கு மாற்றி அவசர கால நிதியை உருவாக்கலாம்.
பங்கு முதலீடு:

பல வகையான முதலீடு வாய்ப்புகள் இருக்கின்றன. அவற்றின் தன்மையை அறிந்து செயல்பட வேண்டும். சம பங்கு முதலீடு நீண்ட கால நோக்கில் பலன் அளிக்கும். அதே நேரத்தில் கடன்சார் முதலீடும் தேவை. டிஜிட்டல் வடிவில் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)