புதிய பாலிசிகளுக்கு அனுமதி எளிதாகிறது புதிய பாலிசிகளுக்கு அனுமதி எளிதாகிறது ... முதல் சம்பளத்தில் மேற்கொள்ள வேண்டிய முதலீடுகள் முதல் சம்பளத்தில் மேற்கொள்ள வேண்டிய முதலீடுகள் ...
சுற்றுலா பயணத்தை திட்டமிட ‘டிஜிட்டல்’ கடன் ஏற்றதா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2022
02:12

விடுமுறை கால பயணத்தை மேற்கொள்வதற்கான ‘டிஜிட்டல்’ கடன் வசதியை நாடுவதில் உள்ள சாதக, பாதகங்கள் பற்றி ஒரு பார்வை.

சுற்றுலா துறையிலும் டிஜிட்டல் கடன் வசதி அறிமுகம் ஆகியுள்ளது.

நுகர்வோர் துறையில், பணம் செலுத்தாமல் சேவை அல்லது பொருளை வாங்கி, பின்னர் தவணை முறையில் அதற்கான தொகையை செலுத்த வழி செய்யும், ‘பை நவ் பே லேட்டர்’ வசதி போலவே, சுற்றுலா துறையிலும், விடுமுறை கால பயணத்தை திட்டமிடும் போது, பணம் செலுத்தாமல், தவணை முறையில் செலுத்தும் வசதி பல ‘ஆன்லைன்’ பயண ஏற்பாட்டு நிறுவனங்களால் அளிக்கப்படுகின்றன. விடுமுறையை கழித்த பிறகு பணம் செலுத்துவது எனும் பொருளில் இந்த வசதி அமைகிறது.

சாதகம் என்ன?
’வெக்கேஷன் நவ், பே லேட்டர்’ என குறிப்பிடப்படும் இந்த டிஜிட்டல் கடன் வசதி, பயண ஏற்பாட்டு நிறுவனங்களால் வங்கி அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்களுடன் இணைந்து வழங்கப்படுகிறது. இந்த கடனுக்கான வட்டி விகிதம், 13 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அமையலாம். கடன் தொகையை 18 மாதங்கள் வரை தவணைகளில் திரும்பி செலுத்தலாம். ‘மேக்மைடிரிப், எக்ஸ்பீடியா’ உள்ளிட்ட ஆன்லைன் பயண ஏற்பாட்டு நிறுவனங்கள் இந்த வகை கடன் வசதியை அளிக்கின்றன. விரும்பிய நேரத்தில் பயணம் செய்ய இந்த கடன் வசதி உதவுகிறது. ஒரு சில நிறுவனங்கள், கடன் பெற்ற 15 நாட்களுக்குள் முழுத்தொகையை திரும்பி செலுத்தினால், பூஜ்ஜியம் சதவீத வட்டி பலனை அளிக்கின்றன.எல்லா துறைகளிலும் டிஜிட்டல் கடன் வசதி பிரபலமாகி வரும் நிலையில், சுற்றுலா பயணங்களை மேற்கொள்வதற்கும் டிஜிட்டல் கடன் வசதி என்பது பொருத்தமாகவே தோன்றலாம்.


அதே நேரத்தில் குறித்த காலத்தில் தவணை செலுத்த தவறினால், அபராதம் விதிக்கப்படும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். சுற்றுலாவுக்கு என திட்டமிட்டு தனியே பணத்தை ஒதுக்காமல் இருப்பவர்களுக்கு இந்த வசதி கைகொடுக்கும். எனினும், இந்த வசதியில் உள்ள பாதகமான அம்சங்களையும் மனதில் கொள்ள வேண்டும்.சுற்றுலா எனும் போது பயண செலவுகள் தவிர பலவிதமான செலவுகள் இருக்கும். ஆனால், டிஜிட்டல் கடன் வசதி வழங்கும் நிறுவனங்கள் நிபந்தனைகளுடன் இந்த வசதியை வழங்கலாம்.
முழு செலவு
உதாரணமாக சில நிறுவனங்கள் தங்கள் மேடையில் பதிவு செய்யப்படும் ‘பேக்கேஜ் டூர்’களுக்கு மட்டும் கடன் வழங்கலாம். ஒரு சில நிறுவனங்கள், விமான டிக்கெட் அல்லது விசா கட்டணங்களுக்கு விலக்கு அளிக்கலாம். எனவே, கடன் வசதி பயண திட்டத்திற்கு ஏற்றதாக இருக்கிறதா என பார்க்க வேண்டும்.அதே போல, பயண ஏற்பாட்டை பல காரணங்களால் கடைசி நேரத்தில் ரத்து செய்ய நேரலாம். இவ்வாறு ரத்து செய்யும் போது, டிஜிட்டல் கடன் வசதி நிபந்தனைகள் எப்படி பொருந்தும் என்றும் கவனிக்க வேண்டும். ரத்து செய்யும் வாய்ப்பு மற்றும் அதற்கான அபராத தொகையையும் மனதில் கொள்ள வேண்டும். இந்த வசதி பயனுள்ளதா என்பதை தீர்மானிக்க அனைத்து அம்சங்களையும் பரிசீலிக்க வேண்டும். இந்த வசதியை விட, ‘கிரெடிட் கார்டு’அல்லது ‘டிராவல் கார்டு’ பொருத்தமாக இருக்கலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)