புதிய பாலிசிகளுக்கு அனுமதி எளிதாகிறதுபுதிய பாலிசிகளுக்கு அனுமதி எளிதாகிறது ... வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
வட்டி விகித உயர்வு சாதாரண மக்களுக்கு நல்லதா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2022
02:37



என்‌ நண்பன் ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் 5 லட்சம் ரூபாய் கடன் கேட்டான். உடனே தொடர்பு கொண்ட போலி நபர்,அவரிடமிருந்து ‘கூகுள்பே’ வாயிலாக வங்கிக்கு பணம் செலுத்தசொன்னவுடன், 3 லட்சத்தை இழந்துவிட்டார். அந்த பணத்தை திரும்ப பெற என்ன வழி?

ஸ்ரீதர், சென்னைகாவல்துறையில் புகார் அளிப்பது மட்டும் தான் ஒரே வழி. ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன். கடன் வாங்குவது என்றால் பொதுத் துறை வங்கிகளுக்குச் செல்லுங்கள். தனியாரிடம் போய்ச் சிக்கிக் கொள்ள வேண்டாம். இரண்டாவது, மொத்த கடன் தொகையில் 0.5 -– 0.75 சதவீதம் வரை தான் ‘பிராசசிங்’ கட்டணம், நிர்வாகக் கட்டணம் என்றெல்லாம் வசூலிக்கப்படும்.

நீங்கள் சொல்வது போல் 5 லட்சம் ரூபாய் கடனுக்கு, 3 லட்சம் ரூபாய் கட்டணம் எல்லாம் வாய்ப்பே இல்லை.மூன்றாவது, கடன் நிறுவனத்தின் முகவர், உண்மையிலேயே அந்த நிறுவனத்தில் தான் வேலை பார்க்கிறாரா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள். போலிகள் நிறைந்த வணிக, நிதி சந்தையில், தெரியாதவர்களிடம் போய் மாட்டிக் கொள்ளக் கூடாது.



அரசு சார்ந்த மற்றும் அரசு சாராத வங்கி, நிதி நிறுவனங்கள், காப்பீடு நிறுவனங்கள் மற்றும் ‘மியூச்சுவல் பண்டு’ நிறுவனங்கள் நாளுக்கு நாள் புதிய திட்டங்களை ஏன் அறிமுகப்படுத்துகின்றன; அதன் முதிர்வு காலமும் அதிகமாக உள்ளனவே. முதிர்வு காலத்திற்கு பிறகு அப்போதுள்ள பணமதிப்புக்கு ஈடாகுமா? பலன் அடைந்தவர்கள் எத்தனை சதவீதத்தினர் இருக்க வாய்ப்பு உள்ளது?புருஷோத்தமன், மதுரை


பொதுமக்களுடைய தேவைகளை ஒட்டியே புதுப்புது திட்டங்கள் அறிமுகம் ஆகின்றன. போட்டி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள திட்டங்கள் வாயிலாக, தங்கள் சந்தை வாய்ப்பு குறைந்து போய்விடலாம் என்ற காரணத்தாலும் பல்வேறு திட்டங்கள் வெளிவருகின்றன. பணவீக்கம் மற்றும் வரி ஆகிய வற்றை மீறி, ஒரு சிறிய அளவிலான வளர்ச்சியைக் கொண்டு வரவே பல திட்டங்கள் முயற்சி செய்கின்றன. எல்லா திட்டங்களுக்கும் அடிப்படை, ‘கூட்டுவட்டியின் மகிமை’ என்று சொல்லப்படும் ‘பவர் ஆப்காம்பவுண்டிங்’ தான். முதிர்வு காலம் எவ்வளவு துாரம் தள்ளி இருக்கிறதோ, அவ்வளவு துாரம் உங்கள் பணம் குட்டி போட்டு, பெருகும்.வருங்காலத்தில் பணமதிப்பு எவ்வளவு இருக்கும் என்பதை தோராயமாகத் தான் மதிப்பிட முடியுமே தவிர, துல்லியமாக சொல்ல முடியாது. இன்றைக்கு வீட்டுச் செலவுக்கு மாதம் 1 லட்சம் ரூபாய் ஆகிறது என்றால், 10 ஆண்டுகள் கழித்து அது 2 லட்சம் ரூபாய் ஆகலாம் என்பது பணவீக்கம் சார்ந்த தோராயமான கணக்கு.இதைவிடக் கூடுதலாக இருக்குமே தவிர, குறையப் போவதில்லை.


அதனால் உங்கள் முதலீடுகள், ஆண்டுக்கு 12 சதவீத வருவாயேனும் ஈட்டும் அளவுக்கு திட்டமிடுவது சரியாக இருக்கும். என் மகள் பொதுத் துறை வங்கியில் வீடு கட்ட, 33 லட்சம் கடன் கேட்டு, 30 லட்சம் அனுமதிக்கப்பட்டு, அதில் 8, 10, 6 லட்சங்கள் மூன்று தவணைகளில் வழங்கப்பட்டன. கடைசி தவணை 6 லட்சம் பாக்கி உள்ளது. தற்போது வீடு கட்டுமானம் முடிந்து பூச்சு வேலைகள் நடந்து வருகின்றன. கடைசி தவணை எப்பொழுது கிடைக்கும்? இ.எம்.ஐ., எப்படி கணக்கிடப்படும்? தற்போதைய ஆர்.பி. ஐ., அறிவிப்புப்படி என் வட்டி விகிதம் மாறுபடுமா? ஆர்.பி.ஐ., அறிவிப்புப்படி 100 சதவீத கடன் கிடைக்குமா?ரகுநாதன், மின்னஞ்சல்கட்டுமானத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நீங்கள் தான் எழுத்துப்பூர்வமாக கொடுத்து, அடுத்த தவணையை வாங்கிக்கொள்ள வேண்டும்.கடைசி தவணை தொகை வந்த அடுத்த மாதம் முதல், எத்தனை ஆண்டுக்கான கடன் வாங்கியுள்ளீர்களோ, அதற்கான இ.எம்.ஐ., துவங்கும். வட்டி விகிதம் கண்டிப்பாக மாறுபடும்.‘ரெப்போ’ விகிதத்தை அடிப்படையாக கொண்ட வீட்டுக்கடன் விகிதம் தான் நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதால், ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படும்போதெல்லாம், உங்கள் வட்டி விகிதமும் மாறுதல் அடையும்.உங்கள் மகளின் வருவாயை ஒட்டியே, அவரது தகுதித் திறன் கணக்கிடப்பட்டு கடன் வழங்கப்பட்டுள்ளது; 33 லட்சம் ரூபாயும் கடனாக கிடைக்காது.


இந்தியாவில் வட்டி விகிதம் 4.40 சதவீதத்தில் இருந்து 4.90 சதவீதமாக உயர்ந்துள்ளதே; இது,நம்மைப் போன்ற சாதாரணமக்களுக்கு நல்லதா?நந்தினி சேகர், வில்லிவாக்கம்பணவீக்கத்தைப் புரிந்துகொண்டால் தான், இந்த வட்டி விகித உயர்வைப் புரிந்து கொள்ள முடியும்.ஓராண்டுக்கு முன் அரை கிலோ காபிப் பொடி, 160 ரூபாய்க்கு வாங்கியிருப்பீர்கள். தற்போது அது, 290 ரூபாய். இதற்கான காரணங்களில் ஒன்று, பணவீக்கம். இதைக் கட்டுக்குள் கொண்டு வர ஒவ்வொரு நாடும் முட்டி மோதுகின்றன. அமெரிக்காவில் கூட, 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மே மாத பணவீக்கம் 8.6 சதவீதத்தைத் தொட்டுள்ளது.


அங்கும் வட்டி விகிதங்கள் தொடர்ந்து உயரப் போகின்றன. நம் நாட்டிலும் மேலும் உயரப் போகிறது. ஆகஸ்ட் மாத பணக்கொள்கை குழு சந்திப்பில் 0.35 சதவீதமும், இந்த நிதியாண்டு இறுதிக்குள் மேலும் அரை சதவீதமும் வட்டி உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024 இறுதிக்குள்ளேனும் கொஞ்சம் மனநிம்மதியோடு காபி குடிக்க முடிந்தால் நல்லது.‘பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா’ காப்பீடு திட்டத்தின் பிரீமியம் தொகை 330 ரூபாயில் இருந்து 436 ரூபாய் உயர்ந்து உள்ளதே: இது சரியா?பிரகாஷ், திருவள்ளூர்இதற்கு இரண்டு காரணங்கள்சொல்லப்படுகின்றன. இத்திட்டம் துவக்கப்பட்ட ஏழு ஆண்டுகளாக பிரீமியம் தொகை உயர்த்தப்படவில்லை.இந்தத் திட்டத்தில் பிரீமியம் தொகையாக, 31 மார்ச் 2022 வரை வசூலிக்கப்பட்டதோ, 9,737 கோடி ரூபாய். ஆனால் திரும்ப கொடுக்கப்பட்ட தொகையோ 14,144 கோடி ரூபாய்.பிரிமியம் தொகையை உயர்த்துவதன் வாயிலாக, மேலும் பல தனியார் காப்பீடு நிறுவனங்கள் இத்திட்டத்தை வழங்கி, காப்பீடு பெறுவோரது எண்ணிக்கையை உயர்த்தும் என்பதே எதிர்பார்ப்பு.ஆயிரம் சந்தேகங்கள் 61

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)