பதிவு செய்த நாள்
14 ஜூன்2022
07:10
வாஷிங்டன் : ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனம், அதன் மிகப் பழைமையான ‘பிரவுசர்’ எனும் உலாவிக்கு, பிரியாவிடை கொடுக்க உள்ளது. மைக்ரோசாப்ட்டின் ‘இன்டர்நெட் எக்ஸ்புளோரர்’ உலாவிக்கு, வயது 27. ‘விண்டோஸ் 95’ உடன் சேர்த்து 1995ம் ஆண்டில்,இந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர் அறிமுகம் செய்யப்பட்டது.
கடந்த 2003ம் ஆண்டில், அதிகபட்சமாக, இந்த பிரவுசரை கிட்டத்தட்ட இன்டர்நெட்டை பயன்படுத்துபவர்களில் 95 சதவீதம் பேர் பயன்படுத்தினர். ஆனால் தொடர்ச்சியாகஅந்த இடத்தை அதனால்தக்க வைக்க இயலவில்லை. பல புதிய போட்டியாளர்கள் வரவும், சமாளிக்க முடியவில்லை. உபயோகிப்பவர் எண்ணிக்கை கிடுகிடுவென குறையத் துவங்கியது. இதனால் இந்த சேவையை மைக்ரோசாப்ட் நிறுத்தப் போவதாக அறிவித்தது. தற்போது அது உறுதியாகி உள்ளது. நாளை முதல் இந்த சேவையை பயன்படுத்த முடியாதுஎன சமூக செய்தி ஊடகமான ‘மாஷபில்’ தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|