பதிவு செய்த நாள்
16 ஜூன்2022
05:55

புதுடில்லி,–‘உலக போட்டித் திறன் குறியீடு’ பட்டியலில்,
இந்தியா, ஆறு இடங்கள் முன்னேறி, 37வது இடத்தை பிடித்துள்ளது.
‘இன்ஸ்டிடியூட்
பார் மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட்’ நிறுவனம், உலக போட்டித் திறன் குறியீட்டை
தொகுத்து வழங்கி வருகிறது.அந்த வகையில், நடப்பு ஆண்டில், இந்தியா, 43வது
இடத்தில் இருந்து, ஆறு இடங்கள் முன்னேறி, 37 வது இடத்துக்கு
வந்துள்ளது.இதற்கு, இந்தியாவின் பொருளாதார செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது
காரணமாக அமைந்துள்ளது
.மொத்தம் 63 நாடுகள் கொண்ட பட்டியலில், டென்மார்க்
முதலிடத்தை பிடித்து உள்ளது. கடந்த ஆண்டில் இது மூன்றாவது இடத்தில்
இருந்தது.சுவிட்சர்லாந்து முதலிடத்திலிருந்து, இரண்டாவது இடத்துக்கு இறங்கி
உள்ளது. மூன்றாவது இடத்தை சிங்கப்பூர் வகிக்கிறது.சீனா ஒரு இடம்
கீழிறங்கி, 17வது இடத்தை வகிக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2021ம்
ஆண்டில், வரிகளில் பெரிய முன்னேற்றங்களைச் செய்ததன் காரணமாக, இந்தியா வணிக
சமூகத்தின் நம்பிக்கையை மீட்டெடுத்து உள்ளது என, உலக போட்டித் திறன் மையம்
தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|