உலக போட்டித் திறன்முன்னேறிய இந்தியா உலக போட்டித் திறன்முன்னேறிய இந்தியா ... பொருளாதார நெருக்கடியை நம்மால் கடக்க முடியும் பொருளாதார நெருக்கடியை நம்மால் கடக்க முடியும் ...
ஜி.எஸ்.டி.,யால் தடைகள் குறைந்தன: தொழில் துறை தலைவர்கள் பாராட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2022
05:59

புதுடில்லி–ஜி.எஸ்.டி., அறிமுகம் ஆனதால், தடைகள் குறைந்து, வணிகம் செய்வது எளிதாகி இருப்பதாக, இந்திய தொழில்துறை தலைவர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்து உள்ளனர்.

சர்வதேச அளவில் தொழில்முறை சேவைகளை வழங்கி வரும் ‘டெலாய்ட்’ நிறுவனம், ஜி.எஸ்.டி., குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.இந்த ஆய்வில் கலந்துகொண்ட இந்திய தொழில்துறை தலைவர்களில் 90 சதவீதம், பேர் ஜி.எஸ்.டி., அறிமுகம் செய்யப்பட்ட காரணத்தினால், இதுவரை இருந்த பல தடைகள் குறைந்து, எளிதாக வணிகம் செய்ய முடிவதாக தெரிவித்து உள்ளனர்.

ஜி.எஸ்.டி., அறிமுகம் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையில் சாதகமான பாதிப்பையே ஏற்படுத்தி உள்ளது என்றும், நிறுவனங்கள் தங்களுடைய வினியோக கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் உதவி இருப்பதாக, அவர்கள் ஆய்வில் தெரிவித்து உள்ளனர்.சிறந்த பலன்களை தரும் வகையில், தானியங்கி முறையில் வரிசெலுத்துவது மற்றும் ‘இ–இன்வாய்சிங், இ-வே பில்’ ஆகியவை அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும், ஆய்வில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன

.‘ஒரு நாடு; ஒரு வரி’ என்ற சீர்திருத்தம், எளிதாக தொழில் துவங்கும் வாய்ப்பை அளித்துள்ளது. வரி செலுத்துபவர்களுக்கும் தொழில் செய்பவர்களுக்கும் மிகவும் பயன் தரத்தக்கதாக இருக்கிறது என்றும் ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)