பதிவு செய்த நாள்
19 ஜூலை2022
05:57

புதுடில்லி : சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனமான, 'அதானி வில்மார்' எண்ணெய் விலையை, 1 லிட்டருக்கு, 30 ரூபாய் வரை குறைத்துள்ளது.'அதானி' குழுமத்தைச் சேர்ந்த, சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனம் அதானி வில்மார். இந்நிறுவனம், 'பார்ச்சூன்' எனும் பிராண்டு பெயரில், தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருகிறது.
உலகளவில் சமையல் எண்ணெய் விலை வீழ்ச்சி கண்ட நிலையில், அதன் பயன்களை நுகர்வோருக்கு வழங்குமாறு உணவு அமைச்சகம், சமையல் எண்ணெய் நிறுவனங்களை கேட்டுக்கொண்டது. இதற்கான சந்திப்பு, கடந்த 6ம் தேதியன்று நடைபெற்றது.இதன் தொடர்ச்சியாக, அதானி வில்மார் நிறுவனம், அதன் சமையல் எண்ணெய் வகைகளின் விலையை, 1 லிட்டருக்கு 30 ரூபாய் வரை குறைத்துள்ளதாக அறிவித்து உள்ளது.
இந்நிறுவனத்தின் சோயாபீன் எண்ணெய் விலை அதிகளவில் குறைக்கப்பட்டு உள்ளது. சூரியகாந்தி எண்ணெய் விலை லிட்டருக்கு, 11 ரூபாய் குறைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.மேலும், விலை குறைக்கப்பட்ட எண்ணெய் வகைகள், விரைவில் விற்பனைக்கு சந்தையை அடையும் என்றும் அதானி வில்மார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|