பதிவு செய்த நாள்
26 ஜூன்2012
05:30
சென்னை:ஐரோப்பாவைச் சேர்ந்த வோக்ஸ்வேகன் நிறுவனம், இந்திய வாடிக்கையாளர்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, "ஜெட்டா' என்ற புதிய காரை அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் இயக்குனர் (பயணிகள் கார் பிரிவு) நீரஜ் கார்க் கூறியதாவது:தற்போதைய இந்திய சந்தைச் சூழலில், எரிபொருள் சிக்கனம் என்பது மிக முக்கியமான அம்சமாக உள்ளது. வாடிக்கையாளர்களின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், இப்புதிய காரில், அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட 1.4 லிட்டர், 4 சிலிண்டர் டி.எஸ்.ஐ., இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இது, குறைந்த எரிபொருளில், அதிக மைலேஜ் கிடைப்பதை உறுதி செய்கிறது.மேலும், பழைய கார்களுடன் ஒப்பிடுகையில், இப்புதிய "ஜெட்டா' காரின் நீளம் 90 மி.மீ., அதிகமாக உள்ளது. இது, வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சொகுசான இருக்கை வசதியை அளிக்கிறது. இது தவிர, 6 வேக கியர் பாக்ஸ், நவீன அலாய் வீல்ஸ், இரட்டை புகை போக்கிகள், நேர்த்தியான உட்புற வடிவமைப்பு, 6 ஏர்பேக்ஸ், பருவநிலைக்கேற்ப செயல்படும் குளிர் சாதனம், உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் இதில் அடங்கியுள்ளன.இப்புதிய காரின் விலை மாடல்களுக்கேற்ப, 13.60 லட்சம் ரூபாய் முதல் 15.07 லட்சம் ரூபாய் வரையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|