நிதி நிறுவனங்களின் நிகர பங்கு முதலீடு ரூ.86 ஆயிரம் கோடி:11 மாதங்களுக்குப் பிறகு...நிதி நிறுவனங்களின் நிகர பங்கு முதலீடு ரூ.86 ஆயிரம் கோடி:11 மாதங்களுக்குப் ... ... நிதி பற்றாக்குறை ரூ.1.81 கோடியாக உயர்வு:நடப்பு நிதியாண்டில் முதல் இரு மாதங்களில்... நிதி பற்றாக்குறை ரூ.1.81 கோடியாக உயர்வு:நடப்பு நிதியாண்டில் முதல் இரு ... ...
நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 281 கோடி டாலர் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2013
01:08

மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 21ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 281 கோடி டாலர் (16,017 கோடி ரூபாய்) சரிவடைந்து, 28,784 கோடி டாலராக (16.41 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, இதற்கு முந்தைய வாரத்தில், 98 கோடி டாலர் (5,586 கோடி ரூபாய்) உயர்ந்து, 29,065 கோடி டாலராக (16.57 லட்சம் கோடி ரூபாய்) இருந்தது. ஆக, தொடர்ந்து இரண்டு வாரங்களாக, அதிகரித்து வந்த, நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, மதிப்பீட்டு வாரத்தில் சரிவடைந்து உள்ளது.கணக்கீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 265 கோடி டாலர் வீழ்ச்சி கண்டு,25,843 கோடி டாலராக குறைந்துள்ளது. அதேசமயம், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு, மாற்றம் எதுவுமின்றி, 2,283 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது.மதிப்பீட்டு வாரத்தில், எஸ்.டீ.ஆர்., மதிப்பு, 2.83 கோடி டாலர் குறைந்து, 437 கோடி டாலராகவும், சர்வதேசநிதியத்தில், நம்நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 12.84 கோடி டாலர் சரிவடைந்து, 220 கோடி டாலராகவும் குறைந்துள்ளது.
நடப்பாண்டு மார்ச் 31ம் தேதி வரையிலான காலத்தில், இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடனுடன் (39 ஆயிரம் கோடி டாலர்) ஒப்பிடும் போது, நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு (28,784 கோடி டாலர்), 74 சதவீதம் அளவிற்கே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ, ஸ்டெர்லிங், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகளில் ஏற்பட்ட மாறுபாட்டால், மதிப்பீட்டு வாரத்தில், கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியின் மதிப்பு சரிவடைந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி, புள்ளிவிவரத்தில் @மலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
அமெ­ரிக்க மத்­திய வங்கி, அந்­நாட்­டில் நில­வும் வட்டி விகி­தத்தை, சமீ­பத்­தில் உயர்த்தி உள்­ளது. எல்­லா­ரும் ... மேலும்
business news
ல­கில், சொகுசு கார் ரசி­கர்­கள் மத்­தி­யில், இத்­தா­லி­யைச் சேர்ந்த, மச­ராட்டி நிறு­வ­னத்­திற்கு, தனி இடம் ... மேலும்
business news
இந்­திய மோட்­டார் வாகன சட்­டப்­படி, கார் ஓட்­டு­னர் மற்­றும் பய­ணி­யர், ‘சீட்­பெல்ட்’ அணி­வது கட்­டா­யம். அது, ... மேலும்
business news
பியட் ஜூன் 30,2013
‘ஜீப், காம்­பஸ்’ எஸ்.யு.வி.,‘பியட்’ நிறு­வ­னத்­தின், ‘ஜீப்’ வரிசை வாக­னங்­களில் ஒன்­றான, காம்­பஸ், எஸ்.யு.வி., ... மேலும்
business news
என்­பீல்டு ஜூன் 30,2013
15 வினா­டி­களில் விற்று தீர்ந்­ததுஎன்.எஸ்.ஜி., எனும், தேசிய பாது­காப்பு படை­யின், கறுப்பு கமாண்டோ வீரர்­கள், ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)