பதிவு செய்த நாள்
13 ஜூலை2013
14:15
கார் விற்பனையில் 9 சதவீதம் சரிந்துள்ளது. தொடர்ச்சியாக 8வது மாதமாக ஜூனிலும் கார் விற்பனை சரிவு கண்டிருப்பது கார் நிறுவனங்கள் மற்றும் டீலர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த மாதம் உள்நாட்டு மார்க்கெட்டில் மொத்தம் 1,39,632 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 1,53,450 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் விற்பனை 9 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. பொருளாதார நிலை, அதிக வட்டி வீதங்கள் மற்றும் எரிபொருள் விலையேற்றம் போன்ற காரணங்களால் கார் விற்பனை குறைந்துள்ளதாக கூறப்படுகின்றன. இந்த நிலை நீடித்தால் நடப்பு நிதி ஆண்டில் கார் விற்பனை வளர்ச்சி கணிசமாக சரியும் என இந்தியா ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பான சியாம் கவலை தெரிவித்துள்ளது. கடந்த மே மாதமும் உள்நாட்டு கார் விற்பனை 9 சதவீதம் வீழ்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|