இலவச மொபைல்போன், கம்ப்யூட்டர்கள்: தொலை தொடர்பு ஆணையம் அனுமதி
மத்திய அரசின் நடவடிக்கைகளால்...வர்த்தக பற்றாக்குறை 1,091 கோடி டாலராக சரிவுமத்திய அரசின் நடவடிக்கைகளால்...வர்த்தக பற்றாக்குறை 1,091 கோடி டாலராக சரிவு ... ரூபாயின் மதிப்பில் உயர்வு : ரூ.63.38 ரூபாயின் மதிப்பில் உயர்வு : ரூ.63.38 ...
இலவச மொபைல்போன், கம்ப்யூட்டர்கள்: தொலை தொடர்பு ஆணையம் அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 செப்
2013
01:35

புதுடில்லி:கிராமங்களில் உள்ள குடும்பங்களுக்கு, இலவச மொபைல் போன்கள், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவச டேப்லெட் கம்ப்யூட்டர்களை வழங்குவதற்கு, தொலைதொடர்பு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்கள், 2.5 கோடி பேருக்கு, மொபைல் போன்கள் வழங்கவும், அரசு பள்ளிகளில் படிக்கும், பிளஸ்-2 மாணவர்கள், 90 லட்சம் பேருக்கு, டேப்லெட் கம்ப்யூட்டர்கள் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இத் திட்டம், அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்கு முன், துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து, தொலைதொடர்பு துறையில் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர் அமைப்பான தொலை தொடர்பு ஆணையம் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இறுதியில் இத் திட்டத்திற்கு ஆணையம் ஒப்புதல் வழங்கியது. இது விரைவில், மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பபடும் என தொலை தொடர்பு துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

மொபைல் போன் மற்றும் டேப்லெட் கம்ப்யூட்டர்கள், மூன்றாண்டு உத்தரவாதம் கொண்டவை. மொபைல் போன்கள், முதலாண்டு, 25 லட்சம் பேருக்கும், இரண்டாம் ஆண்டு, 50 லட்சம் பேருக்கும், மூன்றாண்டாம் ஆண்டு, 75 லட்சம் பேருக்கும், நான்காம் ஆண்டு, ஒரு கோடி பேருக்கும் என நான்கு கட்டமாக வழங்கப்பட உள்ளது. அதே போல், கம்ப்யூட்டர்கள் மூன்று கட்டமாக வழங்கப்பட உள்ளன.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
புது­டில்லி : ‘ஏற்­று­ம­தியும், உள்­நாட்டில் பொருட்­க­ளுக்­கான தேவையும் அதி­க­ரித்­துள்­ளதால், நடப்பு ஜூலை – ... மேலும்
business news
மும்பை : டாடா சன்ஸ் நிறு­வ­னத்தின் இயக்­குனர் குழுவில், டி.வி.எஸ்., மோட்டார், சுந்­தரம் கிளேட்டன் ஆகிய ... மேலும்
business news
சென்னை : ஹூண்டாய் நிறு­வனம், எஸ்.யூ.வி., மாடலில், புதிய கார்­களை அறி­மு­கப்­ப­டுத்த திட்­ட­மிட்டு உள்­ளது. ஹூண்டாய் ... மேலும்
business news
மும்பை : ரிசர்வ் வங்கி, வாராக் கடன் பிரச்­னையில் சிக்கித் தவிக்கும் வங்­கி­களை காக்கும் நோக்கில், புதிய ... மேலும்
business news
புது­டில்லி : வெளி­நாட்டு வர்த்­தக தலைமை இயக்­கு­ன­ரகம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: வெளி­நாட்டு வர்த்­தக கொள்கை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)