ஆடுகளுக்கு தட்டுப்பாடு: கறி விலை ரூ.50 உயர்கிறதுஆடுகளுக்கு தட்டுப்பாடு: கறி விலை ரூ.50 உயர்கிறது ... ரூபாய் மதிப்பு உயர்வு : ரூ.61.52 ரூபாய் மதிப்பு உயர்வு : ரூ.61.52 ...
சர்வதேச கம்ப்யூட்டர் விற்பனை 7 சதவீதம் சரிவடைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2014
04:19

மும்பை:சென்ற 2013ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் (அக்.,டிச.,), சர்வதேச அளவில் கம்ப்யூட்டர் விற்பனை, 8.26 கோடியாக சரிவடைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 8.87 கோடியாக அதிகரித்து காணப்பட்டது. ஆக, மதிப்பீட்டு காலாண்டில், உலகளவில் கம்ப்யூட்டர் விற்பனை, 6.9 சதவீதம் சரிவடைந்துள்ளது என, கார்ட்னர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கணக்கீட்டு காலாண்டில், லெனோவா மற்றும் டெல் ஆகிய நிறுவனங்களை தவிர்த்து, ஏனைய நிறுவனங்களின் கம்ப்யூட்டர் விற்பனை குறைந்து போயுள்ளது. உலகளவில், லெனோவா நிறுவனத்தின் கம்ப்யூட்டர் விற்பனை, மிக அதிகபட்சமாக, 6.6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.40 கோடி என்ற எண்ணிக்கையிலிருந்து, 1.49 கோடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, இந்நிறுவனத்தி“ன் சந்தை பங்களிப்பு, 18.1 சதவீதமாக உள்ளது. இதே போன்று, டெல் நிறுவனத்தின் கம்ப்யூட்டர் விற்பனையும், 6.2 சதவீதம் உயர்ந்து, 92 லட்சத்திலிருந்து, 98 லட்சமாக வளர்ச்சி கண்டுள்ளது. இந்நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 11.8 சதவீதம் என்ற அளவி“ல் உள்ளது. அதேசமயம், எச்.பி., நிறுவனத்தின் கம்ப்யூட்டர் விற்பனை, 7.2 சதவீதம் சரிவடைந்து, 1.46 கோடி என்ற எண்ணிக்கையிலிருந்து, 1.36 கோடியாக குறைந்துள்ளது. இருப்பினும், 16.4 சதவீத சந்தை பங்களிப்புடன் இந்நிறுவனம், சர்வதேச கம்ப்யூட்டர் விற்பனையில் இரண்டாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவை தவிர, கணக்கீட்டு காலத்தில் ஏசர் குழுமத்தின் கம்ப்யூட்டர் விற்பனை, 16 சதவீதமும், ஏசஸ் நிறுவனத்தின் விற்பனை, 19 சதவீதமும், இதர நிறுவனங்களின் கம்ப்யூட்டர் விற்பனை, 11 சதவீதமும் சரிவடைந்துள்ளது என, கார்ட்னர் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)