பதிவு செய்த நாள்
02 ஆக2014
00:04
புதுடில்லி:சென்ற ஜூன் மாதத்தில், முக்கிய எட்டு துறைகள் உற்பத்தி, 7.3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
இது, மே மாதத்தில், 2.3 சதவீதமாகவும், கடந்தாண்டு ஜூனில், 1.2 சதவீதமாகவும் இருந்தது என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் (ஐ.ஐ.பி.,) கணக்கிடுவதில், முக்கிய எட்டு துறைகளின் பங்களிப்பு, 38 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பாண்டு ஜூனில், நிலக்கரி துறையின் உற்பத்தி, 8.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், மைனஸ் 3.1 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டிருந்தது.இதே போன்று, கச்சா எண்ணெய் துறையின் உற்பத்தியும், மைனஸ் 0.6 சதவீதத்திலிருந்து, 0.1 சதவீதமாகவும், சிமென்ட் துறையின் உற்பத்தி, 2.6 சதவீதத்திலிருந்து, 13.6 சதவீதமாகவும் வளர்ச்சி கண்டுள்ளது.மேலும், மின்சார துறையின் உற்பத்தி, 15.7 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது.அதேசமயம், கணக்கீட்டு மாதத்தில், உரத் துறையின் உற்பத்தி, 11.3 சதவீதத்திலிருந்து, மைனஸ் 1 சதவீதம் என்ற அளவில் மிகவும் பின்னடைவை கண்டுள்ளது.
இயற்கை எரிவாயு துறையின் உற்பத்தியும், மைனஸ் 1.7 சதவீதம் என்ற அளவில் பின்னடைந்துள்ளது.பெட்ரோலிய சுத்திகரிப்பு துறையின் உற்பத்தி, 1.8 சதவீதத்திலிருந்து, 1.2 சதவீதமாகவும், உருக்கு துறையின் உற்பத்தி, 7.6 சதவீதத்திலிருந்து, 4.2 சதவீதமாகவும் குறைந்துள்ளன. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்.,– ஜூன்), முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி, 4.6 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது என, அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|