தங்கம் இறக்­கு­மதி 43 சத­வீதம் சரிவுதங்கம் இறக்­கு­மதி 43 சத­வீதம் சரிவு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைவு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
‘பாரா­முகம் காட்டும் பாகிஸ்தான்நீல­கிரி தேயிலை வர்த்­த­கத்தில் பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2014
00:38

ஊட்டி:நீல­கிரி தேயிலை மீது, பாகிஸ்தான் வர்த்­த­கர்கள் பாரா­முகம் காட்­டு­வதால், அதன் வர்த்­த­கத்தில் கடும் சரிவு ஏற்­பட்­டுள்­ளது.
நீல­கிரி மாவட்­டத்தில் உற்­பத்­தி­யாகும் தேயிலை துாள், வாரந்­தோறும் குன்னுார் தேயிலை ஏல மையத்தின் மூலம் விற்­கப்­ப­டு­கி­றது. ஏலத்­துக்கு வரும் தேயிலை துாளில், 50 சத­வீதம் ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கி­றது. பாகிஸ்தான், ரஷ்யா நாடுகள் அதி­க­ளவு தேயிலை துாளை, கொள்­முதல் செய்­கின்­றன.
தவிர, ஈராக், ஈரான், அமெ­ரிக்கா உட்­பட பிற நாடு­க­ளுக்கும் ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கி­றது. கடந்த 6 மாதங்­க­ளுக்கு முன்பு வரை, பாகிஸ்தான் வர்த்­த­கர்கள், அதி­க­ளவு நீல­கிரி தேயிலை துாளை வாங்கி வந்­தனர். தற்­போது அவர்­க­ளது பங்­க­ளிப்பு, குறைந்து வரு­கி­றது.இது­கு­றித்து, நீல­கிரி சிறு தேயிலை உற்­பத்­தி­யா­ளர்கள் சங்கத் தலைவர் கிருஷ்­ண­மூர்த்தி கூறி­ய­தா­வது:நீல­கிரி தேயிலை துாளை, கொள்­முதல் செய்யும் நாடு­களில், பாகிஸ்தான் முக்­கிய இடத்தை பெற்­றி­ருந்­தது.கடந்த 6 மாதங்­க­ளுக்கு முன்பு வரை, பாக்., வர்த்­த­கர்கள், ஒரு கிலோ தேயிலை துாளுக்கு அதி­க­பட்சம், 1.75 டாலர் (இந்­திய மதிப்பில் 105 ரூபாய்) விலை கொடுத்து வாங்­கினர்.
சில மாதங்­க­ளாக, கென்ய நாட்டில் இருந்து அதி­க­ளவு தேயிலை துாளை கொள்­முதல் செய்­கின்­றனர். கூடுதல் தரம் கார­ண­மாக, கென்ய தேயிலை துாளுக்கு, கிலோ­வுக்கு, 4 டாலர் வரை (இந்­திய மதிப்பில் -240 ரூபாய்) விலை கொடுக்­கின்­றனர். இதனால், நீல­கிரி தேயி­லையை குறைந்­த­ளவு மட்­டுமே கொள்­முதல் செய்­கின்­றனர். அதுவும், கிலோ­வுக்கு ஒரு டாலர் (60 ரூபாய்) மட்­டுமே கொடுக்­கின்­றனர். இதனால், நீல­கிரி தேயிலை ஏலத்தில், மந்த நிலை தொடர்­கி­றது.இவ்­வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)