பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றுமதிரூ.90 ஆயிரம் கோடியை எட்டும் பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றுமதிரூ.90 ஆயிரம் கோடியை எட்டும் ... ரூபாயின் மதிப்பில் ஏற்ற - இறக்கம்! ரூபாயின் மதிப்பில் ஏற்ற - இறக்கம்! ...
ஆஸ்திரேலிய நிறுவனங்களின் இந்திய முதலீடு 14 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2014
00:08

மெல்போர்ன்:கடந்த 2013ம் ஆண்டில், ஆஸ்திரேலிய நிறுவனங்கள், இந்தியாவில் மேற்கொண்ட முதலீடு, 657 கோடி டாலராக (39,420 கோடி ரூபாய்) வளர்ச்சி கண்டுள்ளது.
இது, கடந்த 2012ம் ஆண்டில் மேற்கொண்ட முதலீட்டை(578 கோடி டாலர்/34,680 கோடி ரூபாய்) காட்டிலும், 13.7 சதவீதம் அதிகம் என, ஆஸ்திரேலிய வெளிநாட்டு விவகார மற்றும் வர்த்தக துறை (டி.எப்.ஏ.டி.,) தெரிவித்துள்ளது.
அதேசமயம், இந்திய நிறுவனங்கள், ஆஸ்திரேலியாவில் மேற்கொண்ட முதலீடு, 1.3 சதவீதம் சரிவை கண்டுள்ளது.இதன்படி, கடந்த 2012ம் ஆண்டில், 1,100 கோடி டாலராக இருந்த இந்திய நிறுவனங்களின் முதலீடு, 1,086 கோடி டாலராக குறைந்துள்ளது என, டி.எப்.ஏ.டி., மேலும் தெரிவித்துள்ளது.
குஜராத்தை சேர்ந்த அதானி குழுமம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த ஜி.வி.கே., குழும நிறுவனங்கள், ஆஸ்திரேலியாவில், வேளாண், சுரங்கம், கட்டுமானம், தயாரிப்பு மற்றும் தொலைத்தொடர்பு போன்ற துறைகளில் அதிகளவில் முதலீட்டை மேற்கொண்டுள்ளன.கடந்த ஆண்டில், இருநாடுகளுக்கிடையிலான பரஸ்பர வர்த்தகம், 14 சதவீதம் சரிவை கண்டு, 1,521 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.
இது, கடந்த 2012ம் ஆண்டில், 1,767 கோடி டாலராக அதிகரித்து காணப்பட்டது.எனவே, பரஸ்பர வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில், இருநாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளை எளிமைப்படுத்துவது மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பாக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)