புது தொழில்நுட்பத்துடன் பி.எம்.டபிள்யூ., கார்புது தொழில்நுட்பத்துடன் பி.எம்.டபிள்யூ., கார் ... டாடா மோட்டர்சின் போல்ட் கார் அறிமுகம்! டாடா மோட்டர்சின் போல்ட் கார் அறிமுகம்! ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
உலகிலேயே முதன் முறையாக லேசர் முகப்பு விளக்குடன் ஆடி கார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2015
12:25

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த, ஆடி கார் நிறுவனம், இந்தியாவில், 2004ம் ஆண்டு முதல், சொகுசு கார்களை விற்பனை செய்து வருகிறது. வோக்ஸ்வாகன் குழுமத்தை சேர்ந்த இந்த நிறுவனம், இந்தியாவில், 2007 மார்ச் மாதம், முழு மூச்சுடன் காலடி எடுத்து வைத்தது. இந்த நிறுவனம், ஏ3, ஏ4, ஏ6, க்யூ5, க்யூ7 ஆகிய மாடல் கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
உலகளவில், கார் வடிவமைப்பில் பல மாற்றங்களை, ஆடி கார் நிறுவனம் செய்து வருகிறது. அந்த வகையில், எல்.இ.டி., முகப்பு விளக்கை, 2008ல் அறிமுகப்படுத்தியது. அதற்கு அடுத்த ஆண்டு, மேட்ரிக் எல்.இ.டி., முகப்பு விளக்கை அறிமுகப்படுத்தியது. தற்போது,இந்நிறுவனம், லேசர் வசதி கொண்ட முகப்பு விளக்குடன் கூடிய, ஆர்8 எல்எம்எக்ஸ் என்ற புதிய காரை, இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த கார், லிமிடெட் எடிஷன் என்ற வகையில் வெளிவந்துள்ளது. அதாவது, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும், இந்த கார் விற்பனை இருக்கும்.
சிறப்பம்சங்கள்
* எல்.இ.டி., முகப்பு விளக்கைவிட, லேசர் வசதியுடன் கூடிய, எல்.இ.டி., முகப்பு விளக்குகள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன. மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் செல்லும் போது மட்டுமே, இந்த வசதி செயல்பட துவங்கும். எல்.இ.டி., முகப்பு விளக்குகளின் வெளிச்சத்தை உமிழும் திறனைவிட இரண்டு மடங்கு தூரத்திற்கு, லேசர் முகப்பு விளக்கு பிரகாசமாக, வெளிச்சத்தை உமிழும்.
* இந்த காரின் விலை, 2.97 கோடி ரூபாய் (எக்ஸ்ஷோரூம், மும்பை).
* இந்த காரில், 5.2 லிட்டர் வி10 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
* ஏழு ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வசதி கொண்டது.
* பூஜ்ஜியத்தில் இருந்து, 100 கி.மீ., வேகத்தை, 3.4 வினாடிகளில் தொட்டு விடும்.
* அதிகபட்சமாக, மணிக்கு, 320 கி.மீ., வேகத்தில் செல்லும்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)