பதிவு செய்த நாள்
21 மே2015
12:58
இந்தியாவில், 2009ல், ஒரு லட்சம் ரூபாய் விலை கொண்ட கார் என விளம்பரப்படுத்தி, நானோ காரை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. துவக்கத்தில் பெரிய அளவில் எதிர்ப்பு இருந்தாலும், நாளடைவில், இந்த காரின் விற்பனை சீராக தான் இருந்தது.
இந்த நிலையில், நானோ கார் பிரிவில், ‘ஜென்எக்ஸ் நானோ’ என்ற புதிய காரை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த காரில், முந்தைய நானோ காரை விட, பல சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வசதி கொண்டதாக, புதிய கார் வந்துள்ளது.
இந்த காரில், 624 சிசி திறன் கொண்ட பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் வசதி கொண்ட கார், மேனுவல் கியர் பாக்ஸ் என்ற பிரிவில் வருகிறது. ஆட்டோமேடிக் காரில், 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. ஆட்டோமேடிக் கார் பிரிவில், இரண்டு என, மொத்தம், ஐந்து வேரியன்ட்களில் இந்த கார் கிடைக்கும். இதன், டில்லி எக்ஸ்ஷோரூம் விலை, 1.99 லட்சம் ரூபாயில் இருந்து, 2.89 லட்சம் ரூபாய் வரை உள்ளது. வேகமாக செல்ல, ‘ஸ்போர்ட்ஸ் மோடு’ ஆக்சிலேட்டரில் இருந்து காலை எடுத்த பிறகும், மெதுவாக கார் செல்லும் வசதி போன்ற பல புதிய அம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றுள்ளன.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|