அரசு காப்­பீட்டு திட்­டங்கள், ஒரு பார்வைஅரசு காப்­பீட்டு திட்­டங்கள், ஒரு பார்வை ... எஸ்பிஐ., வங்கியின் நிகரலாபம் - ரூ.3,879.07 கோடி எஸ்பிஐ., வங்கியின் நிகரலாபம் - ரூ.3,879.07 கோடி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பாபிலோன் பணக்­காரர் காட்டும் வழி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2015
07:31

செல்­வந்­த­ராகும் வழி­களை விளக்கும் புத்­த­கங்­களில், ‘தி ரிச்சஸ்ட் மேன் இன் பாபிலோன்’ புத்­தகம் மிகவும் முக்­கி­ய­மா­ன­தாக கரு­தப்­ப­டு­கி­றது. நிதித்­துறை வல்­லு­னர்கள் பலரும் பரிந்­து­ரைக்கும் புத்­த­க­மா­கவும் இருக்­கி­றது. அமெ­ரிக்­காவை சேர்ந்த, ஜார்ஜ் சாமுவேல் கிலாசன் எழு­திய இந்த புத்­தகம், 1926ல் வெளி­யா­னது.
செல்­வந்­த­ரா­வ­தற்­கான அடிப்­படை வழி­களை, கிலாசன் இந்த புத்­த­கத்தில் விவ­ரித்­தி­ருக்­கிறார். வழக்­க­மான முறையில் இருந்து மாறு­பட்ட, பண்­டைக்­கால செல்வ நக­ர­மான பாபி­லோனில் நடப்­பது போன்ற கதைகள் மூலம், பணம் பெரு­கு­வ­தற்­கான அடிப்­படை வழி­களை, பாபிலோன் பணக்­காரர் எனும் நாயகன் மூலம் விவ­ரித்­துள்ளார். * 10 சத­வீத மகத்­துவம்: நீங்கள் கைநி­றைய சம்­பா­தித்­தாலும் சரி, குறை­வாக சம்­பா­தித்­தாலும் சரி, வரு­மா­னத்தில் 10ல் ஒரு பகு­தியை உங்­க­ளுக்கு என எடுத்து வைக்­கவும். ஒருவர் சம்­பா­திக்கும் பணத்தில் ஒரு பகு­தியை அவ­ருக்கு என எடுத்து வைக்க துவங்­கு­வதே, செல்­வத்­திற்­கான முதல் படி. வரு­மா­னத்தை செலவு செய்­வ­தற்கு முன், அதை சம்­பா­தித்­தவர் தனக்­குத்­தானே பரிசு கொடுத்­துக்­கொள்ள வேண்டும். * செலவை குறைப்­பது: நாம் அத்­தி­யா­வ­சிய தேவைகள் என கரு­து­வது, எப்­போ­துமே நம் வரு­மா­னத்­திற்கு ஏற்ப வளர்ந்தபடி இருக்கும். நம் விருப்­பங்­களை அத்­தி­யா­வ­சிய தேவை­க­ளாக நினைத்து குழப்­பிக்­கொள்ளக் கூடாது. எல்­லா­ருக்கும் வரு­மா­னத்தை விட அதிக அளவில் ஆசைகள் இருக்கும். எல்­லா­வற்­றுக்கும் வரம்பு இருப்­பது போல, ஆசை­களை நிறை­வேற்­றிக்­கொள்­ளவும் வரம்பு இருக்க வேண்டும். * பெருகும் பணம்: நாம் ஈட்­டிய பணம், நமக்­காக உழைக்க வேண்டும். அதா­வது, மேலும் பணத்தை தேடித்­தர வேண்டும். இதன் மூலம் மேலும் வருவாய் பெருகி செல்வம் சேரும்.* செல்­வத்தை காக்­கவும்: தங்­கத்தை (செல்­வத்தை) பாது­காக்­கா­விட்டால் அது காணாமல் போய்­விடும். செல்­வத்தை பெருக்க நினைக்­கும்­போது, அச­லுக்கு மோச­மில்­லாத வகையில் முத­லீடு செய்ய வேண்டும். அச­லுக்கு ஆபத்து எனும்­போது, அதிக வரு­வாயால் என்ன பயன்? * வீட்டில் முத­லீடு: வரு­வாயில், செல­வுக்­காக உள்ள ஒன்பது பகு­தி­களில், அத்­தி­யா­வ­சிய தேவையை பாதிக்­காத வகையில் ஏதேனும் ஒரு பகு­தியை மேலும் வரு­மானம் வரும் வகையில் முத­லீடு செய்ய முடிந்தால், அதற்­கேற்ப செல்வம் இன்னும் வேக­மாக பெருகும். வாடகை வீட்டில் குடி­யி­ருப்­பதை விட, சொந்த வீட்டில் வசிக்க வேண்டும். * எதிர்­கால வரு­மானம்: குழந்தை பரு­வத்தில் இருந்து வயோ­தி­கத்தை நோக்கி வாழ்க்கை செல்­கி­றது. இள­மையில் பொருள் ஈட்­டு­வது போல, முது­மையில் ஈட்ட முடி­யாது. அந்த காலத்­திற்கு இப்­போதே தயா­ராக வேண்டும். ஏதா­வது ஒரு வகையில் எதிர்­கா­லத்­திற்­காக சேமிக்க வேண்டும். * மேலும் வரு­மானம்: ஒருவர் செய்து கொண்­டி­ருக்கும் தொழிலில் மேலும் திறனை வளர்த்­துக்­கொண்டால் வரு­மா­னமும் அதி­க­ரிக்கும். ஒருவர் கலை­ஞ­ராக இருந்தால், மேலும் நுட்பம் கற்­கலாம். வியா­பாரி என்றால், மேலும் தர­மான பொருளை இன்னும் குறைந்த விலைக்கு வாங்கும் வழி­களை தேட வேண்டும். தன் துறையில் மேம்­பட நினைப்­ப­வரை தேடி செல்வம் வரும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)