பதிவு செய்த நாள்
29 ஆக2015
11:24
பிரபல, ஸ்போர்ட்ஸ் ரக, கார் தயாரிப்பு நிறுவனமான, 'பெராரி' நம்நாட்டில், மீண்டும் விற்பனையை துவங்குகிறது. நம்நாட்டில், 'கலிபோர்னியா-டி' ரக கார்களை, இந்த வாரத்தில், 'பெராரி' அறிமுகம் செய்கிறது. இதன், எக்ஸ் ஷோரூம் விலை, மும்பையில், 3.3 கோடி ரூபாயில் துவங்குகிறது. பெராரி கார்களிலேயே இதன் விலை தான் குறைவாம். இதில், 552 குதிரை சக்தி திறனுடைய, 3.9 லிட்டர், 'பை-டர்போ வி8' இன்ஜின், பொருத்தப்பட்டு உள்ளது. பெராரி சீறிப்பாயும் போதும், அசதியே தெரியாமல் இருக்க, 'பூஸ்ட் மேனேஜ்மென்ட்' நுட்பம் சேர்க்கப்பட்டு உள்ளது. இதன் விற்பனையகங்கள், மும்பை மற்றும் டில்லியில் அமைந்திருக்கும். இந்த ஆண்டுக்கான முன்பதிவு முடிந்து விட்டது. தற்போது, அடுத்த ஆண்டுக்கான முன்பதிவு நடந்து வருகிறது. இந்தியாவில், 3.3 கோடி ரூபாய் காரை வாங்க, போட்டா போட்டி நிலவுவது ஆச்சரியம் தான்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|