பின்­தங்கும் பியட்: இனி­ வேகம் எடுக்­குமா?பின்­தங்கும் பியட்: இனி­ வேகம் எடுக்­குமா? ... ரூபாய் மதிப்பில் உயர்வு : ரூ.67.22 ரூபாய் மதிப்பில் உயர்வு : ரூ.67.22 ...
ஜவுளி துறை சரிவு; கசப்­பான வரி வி­திப்பு; கசங்கி போன ஆடைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2016
06:36

புது­டில்லி : மத்­திய பட்­ஜெட்டில், 1,000 ரூபாய்க்கு மேற்­பட்ட, ‘பிராண்டட்’ ஆயத்த ஆடை­க­ளுக்கு, இரு மடங்கு வரி விதிக்­கப்­பட்­டு உள்­ளதால், அவற்றின் விலை உயர்ந்து, விற்­பனை சரியும் என, இத்­துறை சார்ந்­த­வர்கள் கவலை தெரி­வித்­து உள்­ளனர்.
சர்­வ­தேச பொரு­ளா­தார மந்­த­நி­லையால், ஜவுளி துறையின் ஏற்­று­மதி ஏற்­க­னவே சரிந்­துள்­ளது. இந்­நி­லையில், உள்­நாட்­டிலும், பாதிப்பு ஏற்­ப­டுத்தும் வகையில், 1,000 ரூபாய்க்கு மேற்­பட்ட, வணிக முத்­தி­ரை­யுள்ள ஆயத்த ஆடை­க­ளுக்கு, புதி­தாக, 2 சத­வீத உற்­பத்தி வரி விதிக்­கப்­பட்­டுஉள்­ளது.
அதிக வரிதற்­போது, ஆயத்த ஆடை­க­ளுக்­கான மூலப் பொருட்­க­ளுக்கு செலுத்­திய வரியை திரும்பப் பெறா­தோ­ருக்கு, பூஜ்ய வரியும்; திரும்பப் பெறு­வோ­ருக்கு, 6 – 12.5 சத­வீத உற்­பத்தி வரியும் விதிக்­கப்­ப­டு­கி­றது. பட்­ஜெட்டில், மூலப் பொருட்­க­ளுக்கு செலுத்­திய வரியை திரும்ப பெறா­தோ­ருக்கு, 2 சத­வீ­தமும், வரியை திரும்பப் பெறு­வோ­ருக்கு, 12.5 சத­வீத வரியும் விதிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த வரி விதிப்பு, வரும் ஏப்., 1ம் தேதி முதல் அம­லுக்கு வர உள்­ளது. ‘புதிய வரி விதிப்பால், பிராண்டட் ஆடை­களின் விலை, 5 – 6 சத­வீதம் உயரும். அத்­துடன், 15 சத­வீத சேவை வரியும் பாதிப்பை ஏற்­ப­டுத்தும்’ என, பிராண்டட் ஆடை விற்­ப­னை­யா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.
குறையும் லாப வரம்புபிராண்டட் ஆடைகள் விற்­ப­னையில் ஈடு­பட்டு வரும், உட்மால் நிறு­வ­னத்தின் நிர்­வாக இயக்­குனர், ஹர்­கிரத் சிங் கூறி­ய­தா­வது: கடந்த ஆண்டு, ஆடைகள் விற்­பனை மந்­த­மாக இருந்­தது. தற்­போது, உயர்த்­தப்­பட்­டுள்ள உற்­பத்தி வரி, பிரச்­னையை மேலும் பெரி­தாக்கும். எங்­களின் லாப வரம்பு குறையும். வரிச் சுமையை, நாங்கள் மக்கள் மீது தான் சுமத்த நேரிடும். 1,000 முதல் 2,000 ரூபாய் வரை­யி­லான ஆடை­களை வாங்­கு­வோ­ருக்கு கூடு­த­லாக செல­வாகும். ஏற்­க­னவே, பிராண்டட் ஆடை­க­ளுக்­கான தேவை குறைந்­துள்­ளது. இந்த நிலையில், வரி விதிப்பால், விற்­பனை மேலும் பாதிக்கும். இவ்­வாறு அவர் கூறினார்.
பியூச்சர் ரீடெய்ல் நிறு­வ­னத்தின் நிர்­வாக இயக்­குனர், ராகேஷ் பியானி கூறு­கையில், ‘‘ பிராண்டட் ஆடை­க­ளுக்கு, இரு மடங்கு வரி விதிக்­கப்­பட்­டுள்­ளது ஏமாற்றம் அளிக்­கி­றது. இது, வியா­பா­ரத்தில் மேலும் சுணக்­கத்தை ஏற்­ப­டுத்தும்,’’ என்றார்.
சரியும் நிலை‘‘ஏற்­க­னவே, சற்று அதிக விலை­யுள்ள ஆடை­களின் விற்­பனை குறைந்­துள்­ளது. இது, வரி உயர்வால் அடி­யோடு சரியும்,’’ என, ஷாப்பர்ஸ் ஸ்டாப் நிறு­வ­னத்தின் நிர்­வாக இயக்­குனர், கோவிந்த் ஸ்ரீகடே தெரி­விக்­கிறார்.‘பட்­ஜெட்டில் அறி­விக்­கப்­பட்ட வரி விதிப்பை குறைக்க வேண்டும்’ என, ஆயத்த ஆடை உற்­பத்­தி­யா­ளர்கள் மத்­திய அர­சுக்கு வேண்­டுகோள் விடுத்­து உள்­ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)