டாடா கன்­சல்­டன்சிநிகர லாபம் ரூ.5,652 கோடி ­டாடா கன்­சல்­டன்சிநிகர லாபம் ரூ.5,652 கோடி ­ ... பிராந்­திய மொழி­களில் சேவைகோடாடி நிறு­வனம் ஆரம்­பிக்­கி­றது பிராந்­திய மொழி­களில் சேவைகோடாடி நிறு­வனம் ஆரம்­பிக்­கி­றது ...
நான்­கா­வது காலாண்டில் 350 நிறு­வ­னங்­களின் விற்­ப­னையில் விறு­வி­றுப்­பான வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2016
04:59

மும்பை:கடந்த 2015 – 16ம் நிதி­யாண்டில், ஜன., – மார்ச் வரை­யி­லான நான்­கா­வது காலாண்டு முடி­வு­களை, இது­வரை, 350 நிறு­வ­னங்கள் வெளி­யிட்­டுள்­ளன. அந்­நி­று­வ­னங்­களின் ஒட்­டு­மொத்த விற்­பனை, 5.6 சத­வீதம் வளர்ச்சி கண்­டி­ருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது. ஒட்­டு ­மொத்த லாபம், 16.9 சத­வீதம் அதி­க­ரித்­து உள்ளது. இது, கடந்த, ஆறு காலாண்­டு­களில் காணாத வேக­மான வளர்ச்­சி­யாகும். இந்­நி­று­வ­னங்கள், தொடர்ந்து நான்கு காலாண்­டு­க­ளாக, வரு­வாயில் சரிவைசந்­தித்து வந்­தன. தகவல் தொழில்­நுட்ப துறை சார்ந்த ஏற்­று­ம­தி­யா­ளர்கள், ஒரு ­சில தனியார் வங்­கிகள், வங்கி சாரா நிதி நிறு­வ­னங்கள், ரிலையன்ஸ் இண்­டஸ்ட்ரீஸ், எய்ச்சர் மோட்டார்ஸ் போன்ற தனியார் நிறு­வ­னங்கள், ஒட்­டு­மொத்த விற்­பனை எழுச்­சிக்கு துணை புரிந்­துள்­ளன. அதே­ச­மயம், கெய்ர்ன் இந்­தியா போன்ற எரி­சக்தி துறை நிறு­வ­னங்கள், பொறி­யியல் சாத­னங்கள் தயா­ரிப்பு நிறு­வ­னங்­களின் விற்­பனை வளர்ச்சி குறைந்­துள்­ளது.மதிப்­பீட்­டிற்கு எடுத்துக் கொள்­ளப்­பட்ட காலாண்டில், 350 நிறு­வ­னங்­களின் நிகர விற்­பனை, 4.13 லட்சம் கோடி ரூபா­யா­கவும், நிகர லாபம், 55 ஆயிரம் கோடி ரூபா­யா­கவும் இருந்­தன.
முந்­தைய, 2014 – 15ம் நிதி­யாண்டின், இதே காலாண்டில், இவை முறையே, 3.91 லட்சம் கோடி ரூபாய் மற்றும், 47 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் காணப்­பட்­டன. இதே காலத்தில், தயா­ரிப்பு துறையைச் சேர்ந்த, 196 நிறு­வ­னங்­களின் நிகர விற்­பனை, 3.8 சத­வீ­தத்தில் இருந்து, 5.8 சத­வீ­த­மா­கவும், நிகர லாபம், 4.6 சத­வீ­தத்தில் இருந்து, 15.8 சத­வீ­த­மா­கவும் உயர்ந்­துள்­ளன. அதே­ச­மயம், இதே காலத்தில், தகவல் தொழில்­நுட்ப துறை ஏற்­று­ம­தியை தவிர்த்து, போக்­கு­வ­ரத்து, ஓட்டல், ரியல் எஸ்டேட், தொலை­தொ­டர்பு உள்­ளிட்ட சேவைகள் துறையின் நிகர லாபம், 21.8 சத­வீதம் சரி­வ­டைந்­துள்­ளது.எரி­பொருள் மற்றும் மூலப்­பொ­ருட்கள் விலை குறைவால், தயா­ரிப்பு துறை நிறு­வ­னங்கள் தொடர்ந்து பயன் பெற்று வரு­கின்­றன.
தகவல் தொழில்­நுட்ப துறையைச் சேர்ந்த, டாடா கன்­சல்­டன்சி சர்­வீசஸ், இன்­போசிஸ், மைன்டு ட்ரீ, பெர்­சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் ஆகி­யவை, நான்காம் காலாண்டில், ஜொலிக்கும் நட்­சத்­தி­ரங்­க­ளாக விளங்­கு­கின்­றன.அடுத்து, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், கெயில், ஹிண்­டால்கோ, பி.எச்.இ.எல்., லார்சன் அண்டு டூப்ரோ, ஐ.டி.சி., இந்­துஸ்தான் யூனி­லீவர் உள்­ளிட்ட ஜாம்­ப­வான்­களின் காலாண்டு முடி­வுகள் வர உள்­ளன.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி:நாட்டிலுள்ள தொலைபேசி சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 116. ஏழு கோடியாக, மார்ச் மாதத்தில் அதிகரித்து ... மேலும்
business news
புதுடில்லி:‘டுவிட்டர்’ நிறுவனத்தை, எலான் மஸ்க் மோசமாக்கி விடுவார் என, பில்கேட்ஸ் கருத்து ... மேலும்
business news
சென்னை:துாத்துக்குடி, வேலுார், விழுப்புரம் மற்றும் திருப்பூர் நகரங்களில், ‘மினி டைடல் பார்க்’குகள் ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில், ஏராளமானோரை பணியில் அமர்த்த ... மேலும்
business news
புதுடில்லி:‘எச்.சி.எல்., டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனர் பதவிகளிலிருந்து ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)